ஈஸ்வரிக்கு மெமரி லாஸ்? டாக்டர் வைத்த ட்விஸ்ட் - அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது

Published : Mar 26, 2026, 11:03 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சுமார் 10 மாதங்களாக கோமாவில் இருந்து வந்த ஈஸ்வரி நினைவு திரும்பி மறுஜென்மம் எடுத்து வந்துள்ளார். அதன்பின்னர் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Unexpected Twist in Ethirneechal Thodargiradhu Serial

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இடம்பெறும் முக்கியமான கேரக்டர்களில் ஈஸ்வரி கதாபாத்திரமும் ஒன்று. இந்த கேரக்டரில் நடிகை கனிகா நடித்து வந்தார். வில்லன் ஆதி குணசேகரனின் மனைவியான ஈஸ்வரி கதாபாத்திரம், மிகவும் சாதுவான ஒன்றாகவே ஆரம்பத்தில் காட்டப்பட்டு வந்தது. ஆனால் ஜனனி வீட்டுக்கு வந்து தெம்பூட்டிய பிறகு அவரின் கேரக்டர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கணவனை எதிர்க்கும் அளவுக்கு துணிச்சலுடன் இருந்தார். ஒரு கட்டத்தில் கணவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அவரை ஆதி குணசேகரன் ரூமுக்குள் வைத்து அடித்துவிட்டார்.

25
ஈஸ்வரியை கோமாவுக்கு தள்ளிய சம்பவம்

ஆதி குணசேகரன் தன் பேச்சை மீறி தர்ஷனுக்கு திருமணம் செய்துவைக்க ஆயத்தமாக, அவரிடம் நான் தர்ஷனுக்கு அவன் விரும்பும் பார்கவியை தான் திருமணம் செய்துவைப்பேன் என சவால்விடும்படி பேசி இருந்தார் ஈஸ்வரி. இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன், அவரை சுவற்றில் மோத வைத்து அடித்தார். அவர் அடித்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரி, அந்த ரூமிலேயே மயங்கிக் கிடந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது ஈஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் சுயநினைவை இழந்து கோமாவுக்கு சென்றுவிட்டதாக கூறினர்.

35
ஈஸ்வரியின் கனவை நனவாக்கிய தோழிகள்

ஈஸ்வரி கோமாவில் இருந்த சமயத்தில் அவர் ஆசைப்பட்டபடி ஆதி குணசேகரனை எதிர்த்து தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் செய்து வைத்தார் ஜனனி. அதுமட்டுமின்றி அவர் மீது குண்டாஸ் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க ஆதி குணசேகரன் தலைமறைவாக இருந்தபோது தமிழ் சோறு என்கிற ஈஸ்வரியின் கனவு பிசினஸை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார் ஜனனி. ஆனால் அந்த பிசினஸையும் சதி செய்து மூட வைத்துவிட்டார் ஆதி குணசேகரன். இதையடுத்து ஜனனி கர்ப்பமானதால், பிசினஸை மீண்டும் தொடங்கும் பிளானை கைவிட்டனர்.

45
கோமாவில் இருந்து மீண்டு வந்த ஈஸ்வரி

ஒருகட்டத்தில் தனது ஜாமின் ரத்தாக உள்ள விஷயம் தெரிந்ததும் நல்லவர் போல் வேஷம் போட்ட ஆதி குணசேகரன், தன் மனைவிக்காக ஆஸ்பத்திரிக்கு 50 லட்சத்தை தூக்கி கொடுக்கவும் முடிவு செய்தார். இவரின் நல்லவர் வேஷத்தை நம்பாத பெண்கள் ஈஸ்வரி குணமாகி வரும் விஷயத்தை மூடி மறைத்தனர். இந்த நிலையில், இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மீண்டும் திரும்பி வரும் காட்சியை காட்டி உள்ளனர். அவரைப் பார்த்ததும் ரேணுகா, நந்தினி, ஜனனி, தர்ஷன், தர்ஷினி, சக்தி என அனைவரும் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இதனால் மிகவும் எமோஷனலான எபிசோடாக இது அமைந்துள்ளது.

55
மெமரி லாஸ் ஆனதா?

இருப்பினும் ஈஸ்வரி உடல்நிலையில் சில பின்னடைவு இருப்பதாக டாக்டர் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார். இத்தனை நாள் கோமாவில் இருந்ததால் அவரால் சகஜமாக பேசிப் பழக சில நாட்கள் எடுக்கும் என கூறி இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் பழசை எல்லாம் மறந்திருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வைத்து ஆதி குணசேகரன் தன் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து எஸ்கேப் ஆகவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஈஸ்வரியின் வரவால் இனி அடுத்தடுத்து பல்வேறு எதிர்பாரா திருப்பங்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளது. அதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories