ரஜினியை அதிர வைத்த இளையராஜாவின் ஆக்ரோஷ சபதம்! சூப்பர் ஸ்டாரை மிரட்டினாரா இசைஞானி?

Published : Mar 26, 2026, 10:56 AM IST

'ராஜாதி ராஜா'  படம் வெள்ளி விழா காணவில்லை என்றால் இசையமைப்பதை நிறுத்திவிடுவேன் என இளையராஜா சபதம் செய்தார். இதனால் அதிர்ந்த ரஜினி, படத்தை எப்படியாவது ஓடவைக்க திட்டமிட்டதும், ஆனால் படம் தானாகவே மாபெரும் வெற்றி பெற்றதும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

PREV
17
அதிர்ச்சி அடைந்த ரஜினி.! சிரித்த இளையராஜா.!

திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், இசைஞானி இளையராஜாவும் இணைந்தாலே அது ஒரு மாயாஜாலம்தான். ஆனால், இவர்களின் கூட்டணியில் உருவான ஒரு மெகா ஹிட் படத்தின் பின்னணியில், ரஜினியையே நிலைகுலைய வைத்த ஒரு அதிரடிச் சம்பவம் நடந்தது பலருக்கும் தெரியாது.

27
ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிக்கு ஏற்பட்ட குழப்பம்

1989-ம் ஆண்டு. 'ராஜாதி ராஜா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், நாயகன் ரஜினிகாந்துக்கோ உள்ளுக்குள் ஒருவித நடுக்கம். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. படத்தின் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் ஸ்பாட்டிற்கு வரும்போது கையில் ஒரு சீன் பேப்பர் கூட வைத்திருக்க மாட்டார். தயாரிப்பாளர் பாஸ்கரோ படம் பற்றிப் பேசாமல் எதையோ பேசிக்கொண்டிருப்பார். படத்தின் மூளையான பஞ்சு அருணாச்சலம் ஊரிலேயே இல்லை. "படம் உருப்படியாக வருமா? என் கேரியர் என்னவாகும்?" என்ற கவலையில் ரஜினி உச்சக்கட்ட டென்ஷனில் இருந்தார்.

37
இசைஞானியின் ஆக்ரோஷ சபதம்! மிரண்ட ரஜினி!

தன் கவலையைத் தீர்க்க இளையராஜாவிடம் சென்றார் ரஜினி. அங்கேதான் அந்த அதிரடிச் சம்பவம் நிகழ்ந்தது. ரஜினியின் புலம்பல்களைக் கேட்ட இளையராஜா, சட்டென ஒரு ஆக்ரோஷமான முடிவை அறிவித்தார்.

“ரஜினி... இந்தப் படத்தோட கதை எனக்குத் தெரியாது, ஒரு வரி கூட நான் படிக்கல. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்... இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாடலைன்னா, நான் இனிமேல் என் ஹார்மோனியத்தைத் தொடமாட்டேன்! பாடவும் மாட்டேன்!” என்பதே அது

47
அரண்டு போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இளையராஜாவின் இந்த 'டூ ஆர் டை'  சபதத்தைக் கேட்டு ரஜினிக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஒருவேளை படம் ஓடாவிட்டால், ஒரு மாபெரும் கலைஞனின் இசைப்பயணம் தன்னால் முடிவுக்கு வந்துவிடுமோ என்று ரஜினி அரண்டு போனார்.

57
"பணம் கொடுத்தாவது ஓட வைக்கணும்!" - ரஜினியின் ரகசிய பிளான்

இளையராஜா சொன்னதைச் செய்யக்கூடியவர் என்பது ரஜினிக்குத் தெரியும். இதனால் ஏற்பட்ட பதற்றத்தில், ரஜினி ஒரு அதிரடி முடிவை எடுத்தார். தனக்குத் தெரிந்த விநியோகஸ்தர்களிடம் பேசி, "படம் ஒருவேளை சரியாக ஓடாவிட்டாலும், நான் பணம் தருகிறேன்... எப்படியாவது படத்தை ஓட வைத்து வெள்ளி விழா கொண்டாடிவிடுங்கள்" என்று ரகசியமாகத் திட்டமிட்டார். அந்த அளவுக்கு இளையராஜாவின் சபதம் ரஜினியைத் துரத்தியது.

67
மிராக்கிள்: இளையராஜா சொன்னது பலித்ததா?

ரஜினி எதிர்பார்த்தது போல எந்த 'மேனிபுலேஷனும்' தேவைப்படவில்லை. படம் வெளியான முதல் நாளே தியேட்டர்கள் அதிரத் தொடங்கின. இளையராஜாவின் இசை மற்றும் ரஜினியின் ஸ்டைல் மக்களைக் கட்டிப்போட்டது.

77
ராஜா சொன்னது நடந்தது

இளையராஜா எதைச் சொன்னாரோ, அது அப்படியே நடந்தது! 'ராஜாதி ராஜா' திரையரங்குகளில் 175 நாட்களைக் கடந்து வெள்ளி விழா கண்டது. "அவர் சும்மா சொல்லவில்லை, ஏதோ ஒரு சக்தி அவரைச் சொல்ல வைத்தது" என்று இன்றும் வியப்புடன் பகிர்கிறார் ரஜினி.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories