பதுங்கிய பிரதீப் ரங்கநாதன்... பாயும் லெஜண்ட் சரவணன் - LIKவை அடிச்சு தூக்கிய லீடர்..!

Published : Mar 26, 2026, 09:58 AM IST

விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் ஏப்ரல் 3ந் தேதி ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த தேதியில் இரண்டு படங்கள் மோத காத்திருக்கின்றன.

PREV
14
LIK release date postponed

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) திரைப்படம் மீண்டும் ஒருமுறை ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி, யோகி பாபு நடித்து, அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், ஒவ்வொரு முறையும் ரிலீஸ் நெருங்கும்போது பின்வாங்குவது தயாரிப்பு குழுவினரையே சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது. இப்படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக நயன்தாராவும், 7 ஸ்கிரீன் நிறுவனம் சார்பாக லலித் குமாரும் இணைந்து தயாரித்து உள்ளனர்.

24
களமிறங்கும் லீடர்

தமிழ்நாடு 2040 என்ற கற்பனை உலகை சித்தரிக்கும் இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் பார்வையாளர்களிடம் ஆர்வத்தை கிளப்பியிருந்தாலும், தொடர் தாமதங்கள் காரணமாக அந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருவதாக திரையுலக வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஏப்ரல் 3 தேதி இப்போது இரண்டு படங்களுக்கு களமாக மாறியுள்ளது. அதன்படி துரை செந்தில்குமார் இயக்கத்தில், ஆண்ட்ரியா மற்றும் பாயல் ராஜ்புத் ஹீரோயினாக நடித்துள்ள லெஜண்ட் சரவணனின் லீடர் படம் ஏப்ரல் 3 ரிலீஸை உறுதிப்படுத்தியுள்ளது.

34
காளிதாஸ் 2 ரிலீஸ்

டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே அமோக வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், இந்தப் படம் திரையரங்கிலும் அமோக வரவேற்பை பெற தயாராக உள்ளது. அதே தேதியில் பரத்தின் காளிதாஸ் 2-வும் போட்டியிட இறங்கியுள்ளது. LIK வரும் என்கிற செய்தியால் ஏப்ரல் 10க்கு விலகிய இந்தப் படம், LIK மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் ஏப்ரல் 3-க்கே திரும்பியுள்ளது. மோகன்லாலின் த்ரிஷயம் 3 ஏப்ரல் 10ல் வரவிருப்பதால், அந்த தேதி சாதகமற்றதாக இருக்கும் என்பதை உணர்ந்து ஏப்ரல் 3 தேதியே சரியான தேர்வு என இரு தயாரிப்பு குழுக்களும் முடிவெடுத்துள்ளன. இதனால் போட்டி கடுமையாகி உள்ளது.

44
கம்பேக் கொடுக்க காத்திருக்கும் லெஜண்ட்

ஒரே தேதியில் மூன்று பெரிய படங்கள் மோதிக்கொண்டிருந்த நிலை மாறி, இப்போது இரண்டு படங்களுக்கிடையே ஏப்ரல் 3 திரையரங்குகளில் ஆரோக்கியமான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. லெஜண்ட் சரவணன் இதற்கு முன் நடித்த லெஜண்ட் படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அதனால் லீடர் படம் மூலம் அவர் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்தின் டீசரில் அவரின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories