HBD Mani Ratnam : இளையராஜாவுடன் பிறந்த நாள் காணும் மணி ரத்னம் ..மாயாஜால ஜோடியின் ஹிட் பாடல்கள்!

Published : Jun 02, 2022, 01:40 PM IST

 Happy birthday director Mani Ratnam : இன்று பிறந்தநாள் காணும்  இளையராஜா மற்றும் மணிரத்னம் ஜோடியின் மாயாஜால  ஹிட் பாடல்களைப்  பார்ப்போம்.

PREV
15
HBD Mani Ratnam : இளையராஜாவுடன் பிறந்த நாள் காணும் மணி ரத்னம் ..மாயாஜால ஜோடியின் ஹிட் பாடல்கள்!
Mani Ratnam Celebrates Birthday With Ilayaraja 5 iconic songs

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கிய கீதாஞ்சலி இளையராஜா இசையில் மின்னியது. இதில்  இருந்து  வெளியான "ஓ பாப்பா லாலி" பாடல் வரிகள் ஊட்டி குளுமையை மனதிற்குள் ஊடுருவ செய்கிறது. வெட்டூரி வரிகளில்  எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் உருவான இந்த பாடல் சோக கீதமாய் இளசுகளை வீழ்த்தும் பாடலாக உள்ளது. இதில்  நாகார்ஜுனா, கிரிஜா ஷெட்டர் நடித்திருப்பார்கள்.

25
Mani Ratnam Celebrates Birthday With Ilayaraja 5 iconic songs

1985-ம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் இதய கோவில் இன்றளவும் பிரபலம. ஏனெனில் படம் ஒரு பாடகரை மையமாகக் கொண்டது. இதய கோவிலின் மொத்த பதிவும் செம ஹிட் ஆனாலும், பலருடைய மனதைத் தொட்டு படத்தின் மகத்தான வெற்றிக்கு வழிவகுத்த பாடல் இதயம் ஒரு கோவில்..எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் இளையராஜாவின் கிளாசிக் ட்யூனுடன் சரியாகப் பொருந்துகிறது.

35
Mani Ratnam Celebrates Birthday With Ilayaraja 5 iconic songs

ரஜினியின் கேரியரில் முக்கிய இடத்தை பிரதித்த தளபதியின் இருவரும் ஒன்றிணைத்திருந்தனர். SP பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா பாடிய ராக்கம்மா கைய தட்டு பாடலை இன்றளவும் ஹிட்.. 'சுந்தரி' பாடலில் வரும் 'நான் உன்னை நீங்க மாட்டேன்' என்ற வார்த்தையுடன் ஒத்துப்போகும் இசை, நாம் கேட்கும் நொடியில் நம் இதயத்தை சூடேற்றுகிறது.
 

45
Mani Ratnam Celebrates Birthday With Ilayaraja 5 iconic songs

கீதாஞ்சலி என்ற தெலுங்குப் படத்தை மணிரத்னம் இதயத்தை திருடாதே என்ற பெயரில் வெளியான தயாரிக்கத் திட்டமிட்டார்.இந்த படத்தில்  இளையராஜாவின் ஆல்பத்தின் 'ஓ ப்ரியா பிரியா' பாடல் காதல் கீதம் என்ற பெயரைப் பெற்றது. இந்த காதல் பாடலுக்கு எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான பாடகர் ஜோடி கே.எஸ்.சித்ரா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் கொடுத்தனர். 1989 ஆம் ஆண்டு வெளியானது. 

55
Mani Ratnam Celebrates Birthday With Ilayaraja 5 iconic songs

இறுதியாக காலம்கடந்த மெட்டாக இருக்கும் சின்ன சின்ன வண்ண குயில் பாடல் கட்டாயம் 10 இடங்களில் ஒன்றை பிடிக்கும். 1986-ல் மணிரத்னத்தின் கனவுப் படமான மௌன ராகம் இளையராஜா மெட்டுக்களால் ரசிகர்கள் மனதை வென்றது.. கர்னாடிக் ராகத்தில் (கௌரிமனோஹரி) இளையராஜாவின் அழகான பாடல்  இளம் பெண்ணின்  ஏக்கத்தைப்  படம் பிடித்தது.

click me!

Recommended Stories