HBD Ilaiyaraaja : ஞானதேசிகன் என்னும் இளையராஜா லண்டனில் மேஸ்ட்ரோ ஆன கதை..

Kanmani P   | Asianet News
Published : Jun 02, 2022, 11:53 AM IST

happy birthday Ilaiyaraaja : நம்ம ஊர் இசைஞானி லண்டனில் உள்ள ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவால் பங்கேற்ற போது அசந்து போன நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இளையராஜாவை " மேஸ்ட்ரோ " என்று அடிக்கடி அழைத்துள்ளனர்.

PREV
15
HBD Ilaiyaraaja : ஞானதேசிகன் என்னும் இளையராஜா லண்டனில் மேஸ்ட்ரோ ஆன கதை..
ilaiyaraja

தட்டிலில் துவங்கி ஒப்பாரி வரை இளையராஜா இல்லாதா இடம் இருக்கவே முடியாது.   80ஸ்,90ஸ், 20ஸ் என  4 தலைமுறையை மகிழ்வித்து வரும் பண்ணைபுரத்தக்கு ஆர்மோனியம் இன்று இசையின் அடையாளமாக திகழ்கிறார். ஆர்கெஸ்ட்ரா, இசை குழுவில் ஒருவர் என தன்னை தேற்றி வந்த இசைஞானியை தமிழ் திரையுலகிற்கு அடையாளம் காட்டியது அன்னக்கிளி பாடல் தான். தேவராஜ் மோகன் என்பவரது இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து முதல் படத்திலேயே இவருக்கு பெயரையும், புகழையும் பெற்று கொடுத்தது.

25
ilayaraja

அன்னக்கிளி கொடுத்த பரிசாக அதே ஆண்டில் மேலும் மூன்று படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். தேவராஜ் மோகன் இயக்கத்தில் உருவான பாலூட்டி வளர்த்த கிளி, உறவாடும் நெஞ்சம் மற்றும் திருலோக சந்தர் இயக்கிய பத்ரகாளி படங்களில் கலக்கினார்  இளையராஜா. 

35
ilayaraja

புவனா ஒரு கேள்வி குறி, 16 வயதினிலே, பைரவி,     கண்ணன் ஒரு கை குழந்தை, சிவப்பு ரோஜாக்கள்,     பிரியா,அன்னை ஒரு ஆலயம், கல்யாணராமன், உள்ளிட்ட பல பட பாடல்கள் அன்றைய ரசிகர்களை அடிக்கடி கேட்கவைத்த பாடல்களாக இருந்தவை. அறிமுக நாயகர்களாக இருந்த ரஜினி, கமல் உள்ளிட்டோரின் ஹிட் படங்கள் பலவும் இவர் இசையால் தான் மிளிர்ந்தன.

45
ilayaraja

இளையராஜா என்றாலே அலாதியான பாடல்களில் கோரஸ் குரல்கள் தான் நியாபகத்திற்கு வரும். இவர் புதுப்புது அர்த்தங்களில் போட்ட மெட்டு இன்றுவரை திருமண வீடுகளில் ஒலிக்கும் பொக்கிஷமாகவே உள்ளது.  பயன்படுத்தி பல கோடி இதயங்களை வென்றவர் இளையராஜா நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் தனக்கென தனி சகாப்தத்தை உருவாக்கிகொண்டவர்.

55
ilayaraja

80 வது பிறந்த நாளை கொண்டாடும் இளையராஜா ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப தனது இசையில் பரிமாணங்களை உருவாக்கும் வித்தகர். இன்றைய தலைமுறை வரை  ரசிக்கும் இன்னிசையை தந்தவர் ஞானதேசிகன் என்னும் பெயருடன் சென்னைக்கு வந்த கிராமத்து கீதம். தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் இளைராஜாவை ரசிகர்கள் வாழ்த்து மழையால் குளிர்வித்து வருகின்றனர். 
 

click me!

Recommended Stories