Actress Poorna Engagement : நடிப்புக்கு டாட்டா சொன்ன பூர்ணா.. திடீர் முடிவால் ஷாக்கான ரசிகர்கள்!

Kanmani P   | Asianet News
Published : Jun 02, 2022, 09:32 AM ISTUpdated : Jun 02, 2022, 06:34 PM IST

actress poorna engaged with UAE based businessman : சவரக்கத்தி படம் மூலம் புகழ்பெற்ற நடிகை பூர்ணாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதை அடுத்து நண்பர்கள் திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

PREV
14
 Actress Poorna Engagement  : நடிப்புக்கு டாட்டா சொன்ன பூர்ணா.. திடீர் முடிவால் ஷாக்கான ரசிகர்கள்!
poorna

ஷாம்னா காசிம் என்னும் இயற் பெயரை கொண்ட பூர்ணா நடனக் கலைஞர் மற்றும் மாடலாக அறிமுகமானவர்.. 2004 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான மஞ்சு பொளொரு பெண்குட்டியில் நடிகையாக என்ட்ரி கொடுத்து  60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

24
poorna

தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ திரைப்படம் மூலம் அறிமுகமான பூர்ணா. அதே ஆண்டு கொடைக்கானல், கந்தக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து  தென்னிந்திய நடிகையாக மாறிய இவர் . தலைவி மற்றும் த்ரிஷ்யம் 2 போன்ற படங்களிலும்,  வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

34
poorna

33 வயதான இவர் தற்போது திருமணத்திற்கு தயாராகியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியுடன் பூர்ணா நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.. இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில், ‘குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், நான் எனது அடுத்த வாழ்க்கைப் பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன். இப்போது அது அதிகாரப்பூர்வமானது” எனப் பதிவிட்டுள்ளார். 

44
Poorna

நிச்சயதார்த்த விழாவில் இருந்து சில படங்களை வெளியிட்டுள்ள பூர்ணாவிற்கு அவரது  திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பு வருகின்றனர். அதன்படி நடிகை பிரியாமணி, நடிகர் பாரிஸ் லக்ஷ்மி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

click me!

Recommended Stories