அடக்கடவுளே...அவதூறு பரப்ப தனி அலுவலகமா?- புகாரியில் சிக்கிய பிரபல ஹீரோ

Published : Sep 29, 2022, 10:59 AM ISTUpdated : Sep 29, 2022, 11:12 AM IST

ஒரு பெரிய ஹீரோ எங்கள் மீது சேற்றை வாரி வீச முயற்சி செய்கிறார். அதற்காக அலுவலகம் நடத்தி வருகிறார் என மஞ்சு விஷ்ணு கூறியுள்ளார்.

PREV
13
அடக்கடவுளே...அவதூறு பரப்ப தனி அலுவலகமா?- புகாரியில் சிக்கிய பிரபல ஹீரோ
Manchu Vishnu

தன்னை வேவு பார்ப்பதற்காக 20க்கும்  மேற்பட்ட ஊழியர்களை வைத்து பிரபல நடிகர் அலுவலகம் நடத்தி வருவதாக நடிகர் ஒருவர் கூறியிருப்பது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதாவது தெலுங்கில்பிரபல நடிகராக இருக்கும் மோகன் பாபுவின் மூத்த மகன் மஞ்சு விஷ்ணு தான் அந்த புகாரை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...கூட்டத்தில் சில்மிஷம் செய்த நபருக்கு ஓங்கி பளாரென அறைவிட்ட நடிகை - வைரலாகும் வீடியோ

23
manchu vishnu

இவர் ஹீரோவாக நடித்த வருகிறார். அதோடு ஒரு தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்திருக்கிறார். சமீபத்திய பேட்டியில் மஞ்சு விஷ்ணு , பிரபல நடிகர் பெயரை குறிப்பிடாமல் அவர் பேசிய போது, சமூக வலைதளங்களில் என்னைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. தெலுங்கு நடிகர் சங்க தேர்தலின் போது இந்த விமர்சனங்கள் அதிகமாக இருந்தது. இருந்த போதும் நான் அனைவரையும் சந்தித்து வருகிறேன்.

33
Manchu Vishnu

ஒரு பெரிய ஹீரோ எங்கள் மீது சேற்றை வாரி வீச முயற்சி செய்கிறார். அதற்காக அலுவலகம் நடத்தி வருகிறார். இதனை நான் அறிந்து கொண்டேன். அதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் அலுவலகம் நடத்தி வருகிறார். 

இதையும் படியுங்கள்.... நானே வருவேன் ரிலீஸ்... பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும் அதகளப்படுத்திய தனுஷ் ரசிகர்கள் - வைரல் வீடியோ

என்னை பற்றி அவதூறு பரப்ப 20 க்கும் மேற்பட்ட   ஊழியர்களை அவர் பணியமர்த்தி உள்ளார். நடிகரின் ஐ பி முகவரி மூலம் இதை நான் தெரிந்து கொண்டேன். அவர் மீது வழக்கு தொடர உள்ளேன் எனக் கூறியுள்ளார். அதோடு சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுடனான உரையாடலில் தன்னை ட்ரோல் செய்த மீம் கிரியேட்டர்கள் மற்றும் youtube சேனல் உடன் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று மஞ்சு விஷ்ணு கூறியுள்ளார்.

click me!

Recommended Stories