நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில் இருந்து விலகிய நடிகை ஜோதிகா, பின்னர் 35 வயதினிலே படம் மூலம் திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் மலையாள படத்தில் நடிக்க கமிட் ஆனார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா, காதல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். அப்போது அவருக்கு விருந்து கொடுக்க முடிவு செய்த நடிகர் மம்முட்டி, உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிரியாணியை தயார் செய்து அதனை சூர்யா - ஜோதிகா ஜோடிக்கு பரிமாறி உள்ளார். அதுகுறித்த புகைப்படங்களும் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.