இனி படங்களில் நடிக்க போவதில்லை... இதுவே என் கடைசி படம்! அமைச்சர் பதவியேற்றபின் அதிரடி காட்டும் உதயநிதி!

First Published | Dec 14, 2022, 12:32 PM IST

தமிழக அமைச்சராக பதவி ஏற்று கொண்ட பின், திரையுலகில் நடிப்பதை நிறுத்திக் கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது இவருடைய ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.
 

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின், சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட பின், தன்னுடைய தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு... உதயநிதி மலர் கொத்து ஆசி பெற்றார். மேலும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டதற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 34 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கடந்தாண்டு மே மாதம் பொறுப்பேற்றனர். இதை தொடர்ந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  இதில் 34 அமைச்சர்கள் தற்போது உள்ள நிலையில், 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த வைத்த சில மணிநேரங்களில், உதயநிதி ஸ்டாலின் திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமான ஒரே வாரத்தில்... நடிகை ஹன்சிகா வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
 

Tap to resize

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2008 ஆம் ஆண்டு, விஜய் நடிப்பில் வெளியான 'குருவி' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். ரெட் ஜெயின்ஸ் மூவி நிறுவன மூலம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வருகிறார். இதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு 'ஆதவன்' படத்தில்  கெஸ்ட் ரோலில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகவும் மாறினார்.
 

கடந்த 2012 ஆம் ஆண்டு, இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான உதயநிதிக்கு இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. மேலும் முதல் படத்திலேயே சிறந்த நடிகர் கான ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட சில விருதுகளை பெற்றார். பின்னர் கதிர்வேலன் காதல், நண்பேண்டா, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குறிப்பாக சமீப காலமாக தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும்  இவர் நடிப்பில் வெளியான, கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

ரெஜினா கசாண்ட்ரா இந்த ஹீரோவை காதலிக்கிறாரா.? பிறந்தநாள் வாழ்ந்தால் வெடித்த புது சர்ச்சை..!
 

தற்போது இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கத்தில், மாமன்னன் மற்றும் கமலஹாசன் தயாரிப்பில் ஒரு திரைப்படம் நடிக்க ஒப்பந்தமான நிலையில்.. திடீரென அமைச்சர் பதவி ஏற்றுள்ள காரணத்தால், கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'மாமன்னன்' திரைப்படம் தான் தன்னுடைய கடைசி படம் என இவர் அறிவித்துள்ளது, இவருடைய ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தினாலும்... தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!