இவர் திமிரு, சிலம்பாட்டம் ,எல்லாம் அவன் செயல், சிறுத்தை ஆகிய படங்களில் நடித்திருந்தார். 2013ல் தனுஷின் மரியான் படத்தில் இறுதியாக தோன்றினார் விநாயகன். இதற்கிடையே சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் வசந்த் ரவி ஆகியோரும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு.... "இது எங்கள் பிரச்சனை "சிறை தண்டனை குறித்து தடாலடி அறிக்கை விட்ட லிங்குசாமி
நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் பட குழு ஹைதராபாத்தில் படப்பிடிப்பை துவங்கி விட்டனர்.. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க, பிரபல சண்டை பயிற்சி மாஸ்டர், சிவா தன மகன்களுடன் படத்திற்கான ஆக்சன் சீக்வென்சை மேற்கொள்கிறார் என முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.