மலையாள நடிகையான மாளவிகா மோகனன், மக்கள் மத்தியில் பேமஸ் ஆனது தமிழ் படங்களால் தான். ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த அவருக்கு அடுத்ததாக மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் நடித்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
அந்த வகையில் தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் மாளவிகா. அங்கு படங்கள், வெப் தொடர் என படு பிசியாக நடித்து வரும் இவர் தற்போது முதன்முறையாக மியூசிக் வீடியோ ஒன்றில் நடனம் ஆடி உள்ளார். இந்தியில் தயாராகி உள்ள டவுபா என்கிற மியூசிக் வீடியோவில் பிரபல ராப் பாடகர் பேட்ஷாவுடன் இணைந்து நடனம் ஆடி உள்ளார் மாளவிகா.
இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், நேற்று டுவிட்டர் வாயிலாக நடிகை மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு ஓப்பனாக பதிலளித்தார். அதில் ஏடாகூடமான கேள்வி கேட்டவர்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்தார்.