நடிகர் அஜித் தற்போது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் அங்கு சென்ற அஜித், முதலில் அங்குள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு நாட்கள் ஜாலியாக பைக் ட்ரிப் சென்றார். அவர் பி.எம்.டபிள்யூ பைக்கில் ட்ரிப் சென்ற புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகின.
இரண்டு நாள் பைக் ட்ரிப்பை முடித்துவிட்டு லண்டன் சென்ற அஜித் அங்கு ஜாலியாக சுற்றிப்பார்த்து வருகிறார். அந்த வகையில் கார் மீது அதீத ப்ரியம் கொண்ட அஜித் லண்டனில் உள்ள மெக்லரேன் என்கிற ஆடம்பர கார் ஷோரூமுக்கு சென்று அங்கு உள்ள கார்களை பார்வையிட்டுள்ளார். அப்போது அந்த காரின் அருகே நின்று போட்டோவும் எடுத்துள்ளார்.
அந்த காரின் மதிப்பு ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர நதியோரம் அமைந்துள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் ஸ்டைலாக அமர்ந்தபடி அவர் போஸ் கொடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் அஜித் மிகவும் ஸ்லிம்மான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார்.