அஜித்துக்கு பரிசாக வழங்கப்பட்ட உலகின் முதல் ஃபார்முலா E தீம் SUV கார் - அதன் ரேட் எவ்வளவு தெரியுமா?

Published : Mar 13, 2026, 03:32 PM IST

நடிகர் அஜித் குமார் துபாயில் இருந்து திரும்பிய கையோடு, அவருக்கு மஹிந்திரா நிறுவனத்தின் புதிய வெளியீடான ஃபார்முலா E தீம் SUV கார் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு உள்ளது.

PREV
14
Ajithkumar Launched Mahindra Car

துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்க நடிகர் அஜித் குமார் கடந்த சில மாதங்களாக அங்கு தங்கியிருந்தார். அண்மையில் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அவரால் இந்தியா திரும்ப முடியாமல் இருந்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரானும் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி உயிரிழந்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது.

24
துபாயில் இருந்து திரும்பிய அஜித்

இதன் பின்னர் ஈரான், இஸ்ரேல் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க கூட்டணி நாடுகளான பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதால் போர் பதற்றம் நிலவியது. அந்த நேரத்தில் கார் பந்தயத்திற்காக துபாயில் இருந்த அஜித், அங்கு ஏற்பட்ட பதற்றம் காரணமாக உடனடியாக சென்னை திரும்ப முடியாமல் சில நாட்கள் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித் முழுமையாக பாதுகாப்பாக இருப்பதாக ரசிகர்களுக்கு உறுதி அளித்தார்.

34
அஜித்துக்கு கார் பரிசு

அதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் அஜித் பாதுகாப்பாக சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய பிறகு, அவருக்கு ஒரு சிறப்பு பரிசும் கிடைத்தது. அஜித்தின் கார் ரேசிங் மீதான ஆர்வத்தை பாராட்டும் விதமாக மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமொபைல் பிரிவு தலைவர் வேலுசாமி, உலகின் முதல் ஃபார்முலா E தீம் கொண்ட SUV காரான மஹிந்திரா BE Formula E Edition காரை அஜித்துக்கு பரிசாக வழங்கினார். இந்த காரின் விலை சுமார் 30 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காரின் அறிமுக விழாவில் நடிகர் அஜித்தும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

44
அஜித்தின் அடுத்த படம்

நடிகர் அஜித் கடைசியாக நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பையும் ஆதிக் ரவிச்சந்திரனிடமே ஒப்படைத்துள்ளார் அஜித். அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. அப்படம் ஹார்பர் பின்னணியில் உருவாக உள்ளதாம். அப்படத்திற்காக நடிகர் அஜித் 160 கோடிக்கு மேல் சம்பளாம் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories