Maharaja in China
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா. இப்படத்தை நிதிலன் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் சாச்சனா விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். மேலும் திவ்ய பாரதி, அபிராமி, அனுராக் கஷ்யப், நட்டி நட்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பட்டைய கிளப்பியது.
Maharaja movie
இப்படம் ரூ.110 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. தியேட்டரில் சக்கைப்போடு போட்ட இப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் உலகம் முழுவதும் மகாராஜாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளிநாட்டவர்களையும் இப்படம் வெகுவாக கவர்ந்திருந்ததால், இப்படத்தை உலகளவில் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடும் பணிகளில் படக்குழு இறங்கியது. அதன்படி முதலாவதாக சீனாவில் இப்படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... பெண்ணை பொதுவெளியில் கேவலப்படுத்துவது தொகுப்பாளருக்கு அழகா? விஜய் சேதுபதியை விளாசிய பிரபலம்
Maharaja movie Box Office in China
சீனாவில் ரஜினியின் 2.0 திரைப்படம் 10 ஆயிரம் திரைகளில் ரிலீஸ் ஆனதே சாதனையாக கருதப்பட்ட நிலையில், அதை மிஞ்சும் வகையில் மகாராஜா திரைப்படம் 40 ஆயிரம் திரைகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதன் ப்ரீமியர் ஷோவிற்கே மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்களிலேயே சீனா மக்களிடையே மாஸ் வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.
2.0 Box Office in China
அதன்படி முதல் நாளில் ரூ.5.38 கோடி வசூலித்த இப்படம், இரண்டாம் நாளில் ரூ.13.76 கோடியை வாரிக்குவித்தது. பின்னர் மூன்றாம் நாள் முடிவில் ரூ.7.12 கோடி வசூலித்து இதுவரை 26.55 கோடி வசூலித்து இருக்கிறது. இதுவரை சீனாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் படைத்திருந்தது. அப்படம் ரூ.33 கோடி வசூலித்தது. அப்படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை மகாராஜா திரைப்படம் நான்கு நாட்களில் முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிருச்சு: சிவகார்த்திகேயன் தயாரித்த கொட்டுக்காளி படத்துக்கு நேட்டிவா விருது!