நடிகர் அஜித் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ஏகே 62 படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘விடாமுயற்சி' என்ற மாஸ் ஆன டைட்டிலை வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதைப்பார்த்து உற்சாகத்தில் திளைத்துப் போன ரசிகர்கள், இந்தப் படம் அஜித்துக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும் என பதிவிட்டு வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.