இளையராஜாவின் 50 ஆண்டுகால சாதனையை கௌரவித்த ஆஸ்திரேலியா: விக்டோரியா நாடாளுமன்றத்தில் சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு!

Published : Sep 23, 2026, 08:13 AM IST

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள உலகப் புகழ்பெற்ற மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இசைப் பணியைப் போற்றும் வகையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நாடாளுமன்றத்தில் அவருக்கு உயரிய சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.

PREV
13
ஆஸி. நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு சிறப்பு கவுரவம்

மெல்போர்னில் செப்டம்பர் 22-ஆம் தேதி நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்வில், ‘Australia Post’ சார்பில் இளையராஜாவின் திருவுருவப் படம் தாங்கிய பிரத்யேக வரையறுக்கப்பட்ட பதிப்பிலான நினைவு அஞ்சல்தலைகள் (Commemorative Stamps) வெளியிடப்பட்டன. இந்தச் சிறப்பு அஞ்சல்தலைகளை விக்டோரியா மாநில நிதியமைச்சர் என்வர் எர்டோகன் எம்பி (Enver Erdogan MP) வெளியிட்டு, இளையராஜாவிடம் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

திரையுலகில் இசையமைப்பாளராக 50 பொற்கால ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ஒட்டி, உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ‘Ilaiyaraaja 50’ உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த அஞ்சல்தலை வெளியீட்டு நிகழ்வு அரங்கேறியுள்ளது.

23
தனக்கான பாதையை இசை தேர்ந்தெடுத்துக்கொண்டது - இளையராஜா

இந்தக் கௌரவத்திற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசிய காணொலியை இசைஞானி இளையராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது;

எனது 50 ஆண்டு கால இசைப் பயணத்தை சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டின் மூலம் நினைவு கூரச் செய்ததற்கு விக்டோரியன் அரசாங்கத்தின் நிதியமைச்சர் என்வர் எர்டோகன் எம்பி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தின் ஒரு சிறிய, தொலைதூரக் குக்கிராமத்தில் பிறந்த நான், இசையின் வழியாக திரைப் பட ஸ்டுடியோக்கள், இசை நிகழ்ச்சி அரங்குகள் என உலகம் முழுவதும் பயணித்திருக்கிறேன். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நான் கௌரவிக்கப்பட்டது மனதைத் தொடுவதாகவும், மிகுந்த நெகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்தப் பயணம் இவ்வளவு தூரம் செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை; ஆனால், இசை தனக்கான பாதையைத் தானே தேர்ந்தெடுத்துக்கொண்டது.

இந்தத் தருணத்தில், என்னுடைய இசைக்கு உயிர் கொடுத்த எண்ணற்ற மக்கள், என்னுடன் இணைந்து பயணித்த சக கலைஞர்கள், என் பாடல்களைத் தொடர்ந்து ரசித்துக்கொண்டிருக்கும் அனைத்து தலைமுறையினருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன் என்றார்.

33
உலக இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆஸ்கர் போட்டி

தனது 50 ஆண்டுகால இசைப் பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கடந்த ஜூலை மாத இறுதியில் இருந்து பல்வேறு உலக நாடுகளில் இளையராஜா நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செப்டம்பர் 26-ஆம் தேதியும், பிரிஸ்பேன் நகரில் அக்டோபர் 5-ஆம் தேதியும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதற்கிடையில், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில், 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவு' (Best International Feature Film) சார்பாக இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ‘கோந்தல்’ திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5 தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது இசையால் உலக மக்களைக் கட்டிப்போட்டுள்ள இளையராஜா, இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories