இன்னும் ஆரம்பிக்கவே இல்ல; அதற்குள் எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து இத்தனை பேர் விலகலா?

First Published | Dec 17, 2024, 7:38 AM IST

Ethirneechal 2 Serial Update : எதிர்நீச்சல் 2 சீரியல் வருகிற டிசம்பர் 23-ந் தேதி முதல் ஆரம்பமாக உள்ள நிலையில் அதில் இருந்து விலகிய நடிகர், நடிகைகள் பற்றி பார்க்கலாம்.

Ethirneechal 2

சன் டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சக்கைப்போடு போட்ட சீரியல் தான் எதிர்நீச்சல். திருச்செல்வன் இயக்கிய இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆனதற்கு அதன் கதைக்களமும், அதில் நடித்த நடிகர்களும் தான். குறிப்பாக இதில் ஆதிகுணசேகரனாக நடித்த மாரிமுத்துவின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனதோடு, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் பேசிய வசனங்கள் மீம் டெம்பிளேட்டுகளாக மாறும் அளவுக்கு ரசிகர்கள் அந்த கேரக்டரை கொண்டாடினர்.

Ethirneechal Madhumitha

கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து மரணமடைந்ததை அடுத்து எதிர்நீச்சல் சீரியலும் பின்னடைவை சந்தித்தது. பின்னர் அவருக்கு பதிலாக ஆதி குணசேகரனாக வேலராமமூர்த்தியை நடிக்க வைத்தாலும், மாரிமுத்து அளவுக்கு அவரால் அந்த கேரக்டரை திறம்பட கொண்டு செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் டிஆர்பி அடிவாங்கியதால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதையும் படியுங்கள்... சித்தி முதல் எதிர்நீச்சல் வரை! இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட சீரியல்கள்!


Sathya Devarajan

இதனிடையே எதிர்நீச்சல் தொடரின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியான நிலையில், ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த சீரியலையும் திருச்செல்வம் தான் இயக்க உள்ளார். ஆனால் இந்த சீரியலில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டு உள்ளன. எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மதுமிதா இந்த தொடரில் இருந்து விலகி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அய்யனார் துணை என்கிற சீரியலில் நடிக்க சென்றுவிட்டதால், அவருக்கு பதில் விஜே பார்வதி நடிக்க கமிட்டாகி உள்ளார்.

Farsana Ansaris, Prajana

அதேபோல் இந்த சீரியலில் ஆதிரையாக நடித்த சத்யாவும் விஜய் டிவியில் தனம் என்கிற சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகிவிட்டதால் அவரும் எதிர்நீச்சல் 2-ம் பாகத்தில் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. ஆதிகுணசேகரன் கேரக்டரிலும் வேல ராமமூர்த்திக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க இருக்கிறாராம். அதுமட்டுமின்றி எதிர்நீச்சல் சீரியலில் தாராவாக நடித்த ஃபர்சானா என்கிற குழந்தை நட்சத்திரமும் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதால் அவருக்கு பதில் பிரஜானா என்பவர் நடிக்க உள்ளாராம். இப்படி எதிர்நீச்சல் 2 சீரியல் தொடங்கும் முன்பே இத்தனை மாற்றங்கள் நடந்துள்ளதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் 2 சீரியலில் அதிரடியாக மாற்றப்படும் புதிய குணசேகரன் இவரா? வேற லெவல் செலக்ஷன்!

Latest Videos

click me!