விஜய், சூர்யா படங்களை விமர்சிக்க விஜய் சேதுபதி மறுப்பு!

Published : Dec 16, 2024, 06:06 PM IST

Vijay Sethupathi Avoid to Criticise GOAT and Kanguva Movie: விடுதலை 2 படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி நான் ஏன் மற்ற படங்களைப் பற்றி விமர்சிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

PREV
14
விஜய், சூர்யா படங்களை விமர்சிக்க விஜய் சேதுபதி மறுப்பு!
Viduthalai 2

Vijay Sethupathi Avoid to Criticise GOAT and Kanguva Movie: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் பலர் நடிப்பில் உருவான படம் விடுதலை 2. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விடுதலை படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 2ஆவது பாகத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

24
Vijay Sethupathi Avoid to Criticise GOAT and Kanguva Movie

க்ரைம் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் வரும் 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதன் காரணமாக படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் விடுதலை 2 படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

34
Vijay Sethupathi Viduthalai Part 2 Movie Promotion

அப்படி ஒரு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தெலுங்கு மொழியில் வெளியான கோட் மற்றும் கங்குவா ஆகிய 2 படங்களுமே நல்ல வரவேற்பு பெறவில்லை. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி நான் பட புரோமோஷனுக்கு வந்திருக்கிறேன்.

44
Viduthulaia part 2

அதைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் கூட இது போன்று எனக்கும், என்னுடைய படங்களுக்கும் நடந்திருக்கிறது. என்னையும் ரசிகர்கள் டிரோல் செய்திருக்கிறார்கள். சினிமாவில் வெற்றியும், தோல்வியும் சகஜம் தான். அது எல்லா நடிகர்களுக்கும் நடந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories