அல்லு அர்ஜுன் கைது; ரஜினிகாந்த் பட வில்லன் சுமன் பரபரப்பு கருத்து!

First Published | Dec 16, 2024, 5:24 PM IST

புஷ்பா 2 நாயகன் அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டர் சம்பவத்தில் சிக்கலில் சிக்கியுள்ளார். சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

Iconic Star Allu Arjun

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டர் சம்பவத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நெரிசலுக்கு அல்லு அர்ஜுனும் ஒரு காரணம் என்று கூறி போலீசார் அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

Sandhya Theater incident

கடந்த வெள்ளிக்கிழமை அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்தன. பின்னர் அல்லு அர்ஜுன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தியேட்டர் சம்பவத்தில் அல்லு அர்ஜுனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இந்த சம்பவத்தில் அவரை பலிகடா ஆக்குவது சரியல்ல என்றும் பலர் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆவேசமாக தங்களின் கருத்தை தெரிவித்தனர்.

சூரியை தொடர்ந்து; பேரப்பிள்ளை தூக்க போகும் வயதில் ஹீரோ அவதாரம் எடுக்கும் காமெடி நடிகர்!
 

Tap to resize

Pushpa 2 Actor Allu Arjun Arrest

ரேவதியின் குடும்பத்தினருக்கு, அல்லு அர்ஜுன் தனது தரப்பில் இருந்து ரூ.25 லட்சம் ரூபாய் அறிவித்தார். ஆனால் ரேவதியின் கணவர் எந்த ஒரு சமரசமும் இன்றி, அவர் மீது கொடுத்த புகார் தான் அல்லு அர்ஜுனுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீன் வாங்கிய போதும், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, ஒரு நாள் சிறையில் இருக்க நேர்ந்தது. உயர் நீதிமன்ற தீர்ப்பின் சான்றிதழ்கள் சரியான நேரத்தில் சிறைக்கு வந்து சேர்வதில் ஏற்பட்ட தாமதம் தான் இதற்க்கு காரணம் என கூறப்பட்டது.
 

Suman About Allu Arjun Arrest

இந்த சம்பவம் குறித்து ரஜினிகாந்துக்கு வில்லனாக சிவாஜி படத்தில் நடித்த பிரபல நடிகர் சுமன். சமீபத்தில் அளித்த பரபரப்பான கருத்துக்கள் வைரலாகி வருகின்றன. சந்தியா தியேட்டர் சம்பவத்தில் அல்லு அர்ஜுனுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரைக் கைது செய்தது தவறு. இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் தியேட்டர் நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சுமன் தெரிவித்தார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷிகா விஷாலுக்கு கொடுத்த காதல் பரிசு; என்ன தெரியுமா?

Actor Suman defends Allu Arjun

அல்லு அர்ஜுன் போன்ற ஒரு பெரிய நடிகர் தியேட்டருக்கு வருகிறார் என்றால், போதுமான ஏற்பாடுகளைச் செய்வது தியேட்டர் நிர்வாகத்தின் பொறுப்பு. தியேட்டரில் எத்தனை பேர் உள்ளனர், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது போன்ற அனைத்தையும் நிர்வாகம்தான் கவனிக்க வேண்டும் என்று சுமன் கூறினார். தான் நடிகராக இருந்தபோது, பல தியேட்டர் உரிமையாளர்கள் தன்னை அழைப்பார்கள் என்றும், அப்போது அவர்கள் போதுமான ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுனுக்கு எந்தத் தவறும் இல்லை. நடிகர்கள் யார் வேண்டுமானாலும் தியேட்டருக்குச் செல்லலாம். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சுமன் கூறினார்.

Latest Videos

click me!