புஷ்பா 2 திரைப்படம் நாடு முழுவதும் சக்கைப் போடு போட்டு கொண்டிருக்கிறது. 1000 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் அதிக வசூலுடன் முன்னேறிக்கொண்டிருக்கிறது புஷ்பா 2. இந்தப் படத்தில் இவ்வளவு பெரிய நடிகர்கள் இருந்தும், அவ்வளவு நன்றாக நடித்தும், அல்லு அர்ஜுனின் ஒன் மேன் ஷோவால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர் என்றே கூறலாம். இயக்குனர் சுகுமாரின் இயக்கம், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள், சாம் சி.எஸ்சின் பின்னணி இசை, ராஷ்மிகா மந்தனா என நட்சத்திர பட்டாளம் வெற்றிக்கு வழிவகுத்தது.