எம்ஜிஆரால் தவறை உணர்ந்த எம்.எஸ்.வி – மயில்சாமி சொன்ன சீக்ரெட் ஸ்டோரி தெரியுமா?

First Published | Dec 16, 2024, 1:17 PM IST

MGR and MS Viswanathan: எம்ஜிஆர் மற்றும் எம்.எஸ்.விக்கு இடையிலான சுவாரஸ்யமான சம்பவம் குறித்து மயில்சாமி சொன்ன சீக்ரெட் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

M. S. Viswanathan and MGR

MGR made MS Viswanathan aware of the mistake : தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தமிழக அரசியலிலும் எம்ஜிஆர் பற்றி தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. தன்னோட படங்களில் மட்டுமின்றி அரசியல் வாழ்க்கையிலும் ஏழை மக்களுக்காக கடுமையாக உழைத்தார். ஆரம்ப காலகட்டங்களில் நாடக நடிகராக ஆரம்பித்து அதன் பிறகு துணை நடிகராக சினிமாவில் வந்து ஹீரோவாக ஜொலித்தார்.

M. S. Viswanathan

1936ல் ஆரம்பித்து 1991 வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களும் சரி, பாடல்களும் சரி என்றும் காலத்தால் அழியாத காவியங்கள் தான். பெரும்பாலான படங்கள் எல்லாமே தத்துவ படங்களாகவே இருக்கும். எம்ஜிஆர் ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் சினிமாவில் தன்னை செதுக்கி கொண்டார்.

Tap to resize

MGR and M. S. Viswanathan

எம்ஜிஆரின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது எம் எஸ் விஸ்வநாதனின் இசை தான். நினைத்ததை முடிப்பவன், எங்கள் தங்கம், ரகசிய போலீஸ் என்று பல படங்களில் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் எம்ஜிஆர் இணைந்துள்ளனர். இதில், என்ன சுவாரஸ்யம் என்றால் எம்ஜிஆரே தன்னுடைய நாடோடி மன்னன் படத்தை இயக்கி நடித்து தயாரிக்கவும் செய்துள்ளார்.

M. S. Viswanathan and MGR

இந்த டெக்னிக்கை தான் இப்போது பல ஹீரோக்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான், இருவருக்கும் இடையிலான நட்பு குறித்து காமெடி நடிகர் மயில்சாமி கூறியிருக்கிறார். எம்ஜிஆரை தன்னுடைய உயிராக கொண்டவர். அவரைப் போன்று தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்தவர்.

MGR and M. S. Viswanathan

அப்படிப்பட்ட மயில்சாமி எம்ஜிஆர் பற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் அவரிடம் பகிர்ந்த தகவல் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளிநாடு சென்றிருந்த எம்.எஸ்.வி புதிதாக டேப்டெக்கார்டு ஒன்று வாங்கி வந்துள்ளார். அதில் எம்ஜிஆரின் பாடல் கேட்டு ரசித்துள்ளார். அதனை எம்ஜிஆரிடம் காட்டி, பாடல் பிளே பண்ணியிருக்கிறார்.

MGR Movies

அதில், இனிமையாக பாடல் ஒலிக்கிறது. சூப்பராக இருக்கிறது என்று கூறிய எம்.ஜிஆர் தன்னுடைய உதவியாளரை அழைத்து தன்னிடமிருந்த பழைய டேப்டெக்கார்டில் பாடல் பிளே செய்திருக்கிறார். ஆனால், அது அதிக இரைச்சலுடன் ஒலித்துள்ளது. அதைக் கேட்ட எம்.எஸ்.வி என்ன அண்ணே, இப்படி இரைச்சலோடு பாடல் கேட்கிறது என்று கேட்டுள்ளார்.

M. S. Viswanathan and MGR

அதற்கு பதிலளித்த எம்ஜிஆர் என்னோட ரசிகர்கள் அனைவரும் ஏழைகள் தான். அவர்களிடம் காசு பணம் இருக்காது. அவர்கள் கூலி தொழிலாளிகள். அவர்களுக்கு டேப்டெக்கார்டில் பாடல் கேட்கும் வாய்ப்பு கிடைக்காது. என்னுடைய ரசிகர்களுக்கு அவர்கள் எதில் பாடல் கேட்கிறார்களோ அதில் தான் நானும் பாடல் கேட்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு பிடித்த பாடலை நான் கொடுக்க முடியும் என்று கூறியதாக எம்.எஸ்.விஸ்வநாதன் மயில்சாமியிடம் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!