Vijay TV Fame Nanjil Vijayan
விஜய் டிவியில் தலை காட்டும் பிரபலங்கள் அனைவருமே, அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுகின்றனர். ஆனால் ஒரு சில பிரபலங்களுக்கு மட்டும் இந்த மேஜிக் ஒர்க் அவுட் ஆகாமல் போய் விடுகிறது. அப்படி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, தற்போது விஜய் டிவியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமெடி செய்து ரசிகர்கள் சிரிக்க வைத்து வரும் நாஞ்சில் விஜயன் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.
MR and Mrs Chinnathirai Show Contestant
விஜய் டிவி மெட்டீரியலாகவே மாறிவிட்ட நாஞ்சில் விஜயன், சமீபத்தில் நிறைவடைந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவியுடன் கலந்துகொண்டு விளையாடினார். அப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, எப்போது திருமணம் ஆகும் என காத்திருந்தேன் என்பது போல் பேசியிருந்தார். இவரால் இறுதிச்சுற்று வரை வர முடியவில்லை என்றாலும், நாஞ்சில் விஜயன் மற்றும் மரியா ஜோடி தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றனர்.
nanjil vijayan Announce Wife Pregnancy
சின்னத்திரையில் மட்டும் இன்றி, சமூக வலைத்தளத்திலும் ஆக்ட்டிவாக இருக்கும் நாஞ்சில் விஜயன் குட் நியூஸ் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது நாஞ்சில் விஜயன் மனைவி தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை இந்த ஜோடிகளுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
அல்லு அர்ஜுன் கைது; ரஜினிகாந்த் பட வில்லன் சுமன் பரபரப்பு கருத்து!
Nanjil Vijayan Request for Fans
நாஞ்சில் விஜயன் சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள வீடியோவில் , எங்கள் வீட்டிலும் விசேஷம். மரியா கர்ப்பமாக உள்ளார். நான் அப்பாவாக போறேன். எங்களுக்காகவும், எங்களுக்கு பிறக்க உள்ள குழந்தைக்காகவும் கடவுளிடம் வேண்டி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். நாஞ்சில் விஜயன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.