நீதிமன்றத்தில் விசாரணை; ஒரு பக்கத்திற்கு அறிக்கை: நறுக்குன்னு பதில் சொல்லி ஊர் வாயடைத்த மாதம்பட்டி!

Published : Oct 15, 2025, 09:41 PM IST

ஜாய் கிரிசில்டா எழுப்பி வரும் சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு பக்க நீளத்திற்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

PREV
16
மாதம்பட்டி ரங்கராஜ்

சமையல் கலை வல்லுநரான மாதம்பட்டி ரங்கராஜ் சமூகத்தில் பெரிய அந்தஸ்து உடையவர். முதல் மனைவி இருக்கும் போது விவாகரத்து கூட பெறாத நிலையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவுடன் நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கி அவரை திருமணம் செய்து கொண்டு இப்போது ஏமாற்றிவிட்டார். மாதம்பட்டி ரங்கராஜின் இச்செயல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி வரும் நிலையில் அவர் மீது நாளுக்கு நாள் விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

26
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா

இந்த நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே தன்னைப்பற்றி அவதூறு பரப்ப ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்ககோரி நீதிமன்றத்தை மாதம்பட்டி நாடியிருக்கிறார். ஆனால் அவருக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

36
ஜாய் கிரிசில்டா

இதற்கிடையில் தான் காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அப்செட் ஆன ஜாய் கிரிசில்டா, கடந்த வாரம் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில், புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், மாதம்பட்டி ரங்கராஜ் திருமண மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, அவர் தன்னைப்போல் 10 பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் கூறி ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார்.

ஓஹோ இதுதான் இயக்குனரோட பிளானா: பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை ஆட்டைய போடும் தங்கமயில் அண்ட் கோ?

46
ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன்

இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி அக்டோபர் 15ஆம் தேதி இன்று மகளிர் ஆணையத்தில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல் ஜாய் கிரிசில்டாவும் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் இப்போது ஒரு பக்க நீளத்திற்கு அறிக்கை வெளியிட்டதோடு தன்னை பற்றி பேசி வரும் அனைவருக்கும் நறுக்குன்னு பதில் அளித்து ஊர் வாயடைத்துள்ளார். இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாது:

56
திருமதி ஜாய் கிரிசில்டா

அனைவருக்கும் வணக்கம். திருமதி ஜாய் கிரிசில்டா எழுப்பி வரும் சர்ச்சைகளை தீர்த்து வைக்குமாறு பலரும் தன்னை தொடர்பு கொண்டு வருகின்றனர். எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. உண்மை சட்டத்தின்படியே நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சை தீர்த்துக் கொள்ள நான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன். இந்த பிரச்சனை தொடர்பான நான் ஊடக விசாரணை அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ ஊக்குவிக்கவோ விரும்பவில்லை.

75ஆவது பிறந்தநாளுக்காக ஆத்தா போட்ட கண்டிஷன் – வாயடைத்து போன இளையவர் சக்திவேல்!

66
நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்வு

நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த அனுமானங்களையும், கருத்துக்களையும் வெளியிடுவதை தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போன்று நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்வு காண ஒரு போதும் நான் விரும்பவில்லை. இச்சம்பவம் தொடர்பாக எனது நலனில் அக்கறை காட்டி எனக்கு ஆதரவு காட்டிய அனைத்து நலன் விரும்பிகளுக்கும் எனது நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் டெல்லியில் உணவகம் ஒன்றை திறந்துள்ளார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. என்னதான் மாதம்பட்டி ரங்கராஜிற்கு எதிராக ஜாய் கிரிசில்டா சம்பவங்கள் செய்தாலும், அவர் எப்போதும் கூலாக தனது பிஸினஸை விரிவுபடுத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories