மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியோடு நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அவரின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா தற்போது பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
புகழ்பெற்ற சமையல் கலைஞராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ், இவர் சமையலுக்கு ஒட்டுமொத்த கோலிவுட்டே அடிமை என சொல்லலாம். அந்த அளவுக்கு திரைப்பிரபலங்களின் பேவரைட் குக் ஆக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார். இவர் சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், கடந்த மாதம் இவரை தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக ஜாய் கிரிசில்டா என்பவர் பதிவு ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
24
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா திருமணம்
திருமணம் செய்துகொண்ட தகவலை வெளியிட்ட மறுதினமே தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். இருவரும் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படமும் வெளியானது. இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் முறைப்படி தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தான் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்டாரா என்கிற கேள்வியும் எழுந்தது. இந்த சர்ச்சையை பற்றி மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரை வாய்திறக்கவில்லை. அதேபோல் அவரின் மனைவி ஸ்ருதியும் இதுபற்றி எந்தவித பேட்டியும் கொடுக்கவில்லை. ஆனால் ஜாய் கிரிசில்டா மட்டும் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
34
முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ்
இதனிடையே நேற்று நடைபெற்ற ஒரு விழாவில், மாதம்பட்டி ரங்கராஜும், அவரது மனைவி ஸ்ருதியும் கலந்துகொண்டனர். இருவரும் ஜோடியாக கலந்துகொண்டதால் அவர்கள் தாங்கள் இருவரும் பிரியவில்லை என்பதை சூசகமாக அறிவித்துள்ளார்கள் என கூறப்பட்டது. முதல் மனைவியோடு நெருக்கமாக இருந்தாலும் ஜாய் கிரிசில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் ஏன் திருமணம் செய்துகொண்டார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியோடு விழாவில் கலந்துகொண்ட புகைப்படம் வைரல் ஆன நிலையில், இன்று ஜாய் கிரிசில்டா ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் மருத்துவமனைக்கு செக் அப்புக்கு சென்றபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜாய் கிரிசில்டா, மருத்துவமனையில் தன்னுடைய பெயரை ஜாய் ரங்கராஜ் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தற்போதே பெயர் சூட்டியும் இருக்கிறார். அதற்கு ராஹா ரங்கராஜ் என பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இப்படி இரண்டு நாளில் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி நான் தான் என சொல்லும் வகையில் ஸ்ருதி மற்றும் ஜாய் இருவரின் புகைப்படங்களும் வெளியாகி சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆகி உள்ளது.