மாதம்பட்டி ரங்கராஜ் அண்ட் ஸ்ருதி மற்றும் ஜாய் கிரிசில்டா
சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியை பிரிந்த நிலையில் 2ஆவதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
24
மாதம்பட்டி ரங்கராஜ் 2ஆவது திருமணம்
கோவை மாதம்பட்டி ரங்காஜ் சமையல் கலைஞரான இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார்.மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை 2ஆவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
34
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஸ்ருதி
ஏற்கனவே கோவையைச் சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் விவாகரத்து கூட செய்யாமல் 2ஆவது திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து ரங்கராஜ் எந்த பதிவும் போடவில்லை. ஆனால், ஜாய் கிரிசில்டா தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
44
முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ்
இந்த நிலையில் தான் முதல் மனைவி ஸ்ருதி மற்றும் ரங்கராஜ் இருவரும் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் இருவரும் ஒருவருக்கொருவர் அருகருகில் அமர்ந்திருந்தது தான் இப்போது பூகம்பமாக வெடித்துள்ளது. இதில் இருவரும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து கூட பேசிக் கொள்ளவில்லையாம். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.