Rajinikanth Coolie Gets Special Shows :2025ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ரஜினிகாந்தின் கூலி படமும் ஒன்று. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் வரும் 14ஆம் தேதி நாளை மறுநாள் திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் காம்பினேஷனில் திரைக்கு வரும் 4ஆவது படம்.
இதற்கு முன்னதாக லியோ, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 4ஆவதாக கூலி படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெசி, காளி வெங்கட், ஜூனியர் எம்ஜிஆர் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அமீர் கான் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.