ரஜினி பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய லப்பர் பந்து! 5 நாளில் இம்புட்டு வசூலா?

First Published | Sep 25, 2024, 7:56 AM IST

Lubber Pandhu Box Office : ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் லப்பர் பந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.

Lubber Pandhu Movie Beats Lal Salaam Box Office Collection

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பவர் ஹரிஷ் கல்யாண். அந்த வகையில் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தாராள பிரபு, பார்க்கிங் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்து அவர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் தான் லப்பர் பந்து. இப்படத்தை தமிழரசன் பச்சைமுத்து என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார்.

Lubber Pandhu

இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து, அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அவர் இயக்கியுள்ள முதல் திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சஞ்சனா நடித்துள்ளார். மேலும் கெத்து என்கிற கதாபாத்திரத்தில் அட்டக்கத்தி தினேஷும் அவருக்கு ஜோடியாக சுவாசிகாவும் நடித்துள்ளனர்.

Latest Videos


Lubber Pandhu Collection

முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர். கிரிக்கெட் சம்பந்தமான படமாக இருந்தாலும் இப்படத்தில் காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் உள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இப்படத்தின் இசை தான். ஷான் ரோல்டனின் பின்னணி இசை திரைக்கதையின் விறுவிறுப்புக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்... "ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு" சூப்பர் ஸ்டாருடன் மாஸ் போஸ் கொடுக்கும் புகழ் - வைரலாகும் கிளிக்ஸ்!

Lubber Pandhu Box Office

வெளியான முதல் நாளில் இருந்தே விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் படிப்படியாக பிக் அப் ஆகி, சக்கைப்போடு போட்டு வருகிறது. முதல் நாளில் 75 லட்சம் மட்டுமே வசூலித்த இப்படம், இரண்டாம் நாளில் அதைவிட டபுள் மடங்கு அதாவது 1.65 கோடி வசூலித்தது. பின்னர் மூன்றாம் நாளில் மேலும் வசூலில் வளர்ச்சி கண்ட இப்படம் 2.15 கோடியை வாரிக்குவித்தது. பின்னர் நான்காம் நாளில் 1.1 கோடி வசூலித்த லப்பர் பந்து திரைப்படம் ஐந்தாம் நாளான நேற்று அதைவிட கூடுதலாக, அதாவது 1.20 கோடி வசூலித்து இருக்கிறது.

Lubber Pandhu vs Lal Salaam Box Office

இதன்மூலம் ரஜினிகாந்தின் லால் சலாம் பட வசூல் சாதனையை லப்பர் பந்து முறியடித்து உள்ளது. லால் சலாம் திரைப்படம் ஐந்தாவது நாளில் வெறும் 1.16 கோடி மட்டுமே வசூலித்து இருந்த நிலையில், ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து திரைப்படம் ஐந்தாவது நாளில் மட்டும் 1.20 கோடி வசூலித்து இருக்கிறது. இதன்மூலம் ரஜினி படத்தின் ஐந்தாவது நாள் கலெக்‌ஷனை விட 40 லட்சம் கூடுதலாக வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி இருக்கிறது லப்பர் பந்து.

இதையும் படியுங்கள்... வீட்டை விட்டு துரத்திய மனைவி ஆர்த்தி? ஜெயம் ரவி காவல் நிலையத்தில் கொடுத்த பரபரப்பு புகார்!

click me!