அதன் பிறகு "கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்" நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற புகழுக்கு கிடைத்த மிகச் சிறப்பான வாய்ப்பு தான் கடந்த 2019ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய "குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சி. உண்மையில் இந்த நிகழ்ச்சி அவருக்கு தந்த வரவேற்பு என்பது வேறு ஒரு பரிமாணத்தில் இருந்தது என்றே கூறலாம்.
அதன் பிறகு ஸ்டார் நடிகராக மாறிய புகழ் மெல்ல மெல்ல திரை துறையிலும் தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பிரபல நடிகர் வைபவின் "சிக்சர்" என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். தொடர்ச்சியாக "கைதி", "சபாபதி", "என்ன சொல்ல போகிறாய்", "வலிமை", "வீட்டில் விசேஷம்" மற்றும் "யானை" போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய புகழுக்கு, கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான "அயோத்தி" என்ற திரைப்படம் ஒரு பிரேக்கிங் பாய்ன்ட் ஆக அமைந்தது.