2028ம் ஆண்டு, சீனா ரஷ்யாவோடு இணைந்து புதிய குடியரசு ஒன்றை உருவாக்குகிறது. அது மற்ற ஐக்கிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது. இந்த சூழலில் சீனா மற்றும் ரஷ்யா புதிதாக தொடங்கி இருக்கும் குடியரசுக்கு, இந்தியா தலைவணங்காமல் போகும் பட்சத்தில், அதற்கான எதிர் வினைகளை அது எதிர்கொள்கிறது. இந்த சூழலில் தான் தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஒருவருடைய வலதுகரமாக செயல்படும் நடராஜ் என்பவர், தான் அனைத்தையும் ஆளும் ராஜாவாக மாற வேண்டும் என்று நினைக்கிறார். இறுதியில் சீனா மற்றும் ரஷ்யா, இந்தியாவை தாக்கியதா? நடராஜ் இறுதியில் என்ன ஆனார்? என்பதை பல சுவாரசியமான சம்பவங்களை கலந்து கூறியுள்ள திரைப்படம் தான் கடைசி உலகப் போர்.
தமிழ் திரை உலகில் கடந்த பல ஆண்டுகளாகவே இசையமைப்பாளராக பயணித்து வருபவர் தான் ஹிப் ஹாப் தமிழா ஆதி. முதலில் இண்டிபெண்டன்ட் இசை ஆல்பங்களை தொகுத்து வழங்கி வந்த அவர். கடந்த 2015ம் ஆண்டு பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகர் விஷால் நடிப்பில் வெளியான "ஆம்பள" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களம் இறங்கினார். தொடர்ச்சியாக "இன்று நேற்று நாளை", "தனி ஒருவன்", "அரண்மனை 2", "கதகளி" மற்றும் "கத்தி சண்டை" போன்ற திரைப்படங்கள் ஒரு இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பை கொடுத்தது. இந்த 2024ம் ஆண்டில் மட்டும் இதுவரை அவருடைய இசையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஐந்து திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.
34
Kadaisi Ulaga Por Movie
ஒரு இசையமைப்பாளராக தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஹிப் ஹாப் தமிழா ஆதி. கடந்த 2017ம் ஆண்டு வெளியான "மீசைய முறுக்கு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும், இயக்குனராகவும், எழுத்தாளராகவும் தமிழ் திரையுலகில் களமிறங்க, தொடர்ச்சியாக "நட்பே துணை" மற்றும் "சிவகுமாரின் சபதம்" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி நடித்து புகழ்பெற்றார். ஹிப்ஹாப் தமிழா ஆதி பிற இயக்குனர்களின் இயக்கத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது அவருடைய இயக்கம், எழுத்து, தயாரிப்பு, நடிப்பு மற்றும் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "கடைசி உலகப்போர்".
44
Actor Hiphop tamizha
கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த சூழலில் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 100% வெளியாகும் என்று தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ஏற்கனவே அந்த படத்திற்கான சில காட்சிகளை கூட தான் படமாக்கி விட்டதாகவும். இரண்டாம் பாகத்திற்கான கதை 100 சதவிகிதம் ரெடியாக உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் மனிதனுக்கும், AI தொழில்நுட்பத்திற்கும் இடையே நடக்கும் ஒரு போர் என்றும் அவர் கூறுகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.