'கருடன்' பட நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ள 'மார்கோ' படத்தின் போஸ்டர் வெளியானது!

First Published | Sep 24, 2024, 9:33 PM IST

உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள 'மார்கோ' படத்தின் 2வது போஸ்டர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

Actor Unni Mukundans upcoming film Marco

'கருடன்' படத்தில் சூரியுடன் நடித்து, அனல் பறக்கும் நடிப்பை வெளிப்படுத்திய மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ள, 'மார்கோ' படத்தின், புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

பான்-இந்தியன் நட்சத்திரமான உன்னி முகுந்தன், பிரபல தயாரிப்பாளர் ஷரீப் முகமதுவின் கியூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடித்துள்ள  'மார்கோ' படத்தில் முரட்டு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 

Garudan Movie Fame

இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர், உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது. 'மார்கோ' படத்தில் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்துவருவதாலும் , இவர் தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து நடிப்பதாலும் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும்போது.. 1 மணிநேரம் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா! ஸ்தம்பித்த ஸ்டூடியோ!


Unni Mukundan starrer Marco film updates out

இதுவரை உன்னி முகுந்தன் நடித்த படங்களை விட, இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான வேடத்தில்... அதுவும் முரட்டு வில்லனாக நடித்துள்ளார். ஏற்கனவே உன்னி முகுந்தன் நடித்து சமீபத்தில் தமிழில் வெளியான 'கருடன்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால்... இந்த படத்திற்கும் தமிழ் ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Marco Poster

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில், அன்சன் பால், அபிமன்யு திலகன், அஜித் கோஷி, இஷான் ஷௌகத், மேத்யூ வர்கீஸ், ஜெகதீஷ், சித்திக், கபீர் துஹான் சிங், யுக்தி தரேஜா மற்றும் துர்வா தாக்கர் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு, ஷமீர் முஹம்மது எடிட்டிங், ரவி பஸ்ரூர் இசை இயக்கம், கலை கிங்சன் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி உள்ளிட்ட திறமையான தொழில்நுட்பக் குழு இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 8 துவங்குவது எப்போது? தேதியை உறுதி செய்த விஜய் சேதுபதியின் புதிய புரோமோ!

Latest Videos

click me!