ஹைதராபாத்தில் நடந்த கார்த்தியின் "மெய்யழகன்" திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வில், தொகுப்பாளர், கார்த்தியை நோக்கி ஒரு கேள்வியை முன் வைத்தார். அதாவது உங்களுக்கு "லட்டு வேண்டுமா?" என்று கேட்க, அதற்கு பதில் அளித்த நடிகர் கார்த்தி "இங்கு லட்டு பத்தி எதுவும் பேசக்கூடாது.. ரொம்பவும் சென்சிடிவான டாபிக் அது" என்று கொஞ்சம் சிரித்துக்கொண்டே கூறியிருந்தார். அவர் பேசிய அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில், அது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வரை சென்றது.
இந்நிலையில் கார்த்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பவன் கல்யாண் "ஒரு நடிகராக அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் சனாதன தர்மம் என்று வரும் பொழுது ஒரு விஷயத்தை நாம் பேசுவதற்கு முன் 100 தடவையாவது யோசித்து விட்டு பிறகு பேச வேண்டும்" என்று சற்று காட்டத்துடன் பதில் அளித்தார்.