வீட்டை விட்டு துரத்திய மனைவி ஆர்த்தி? ஜெயம் ரவி காவல் நிலையத்தில் கொடுத்த பரபரப்பு புகார்!

Published : Sep 24, 2024, 10:42 PM IST

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து விவகாரம் ஒருபுறம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஜெயம் ரவி நீலாங்கரையில் உள்ள காவல் நிலையத்தில், மனைவி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.  

PREV
15
வீட்டை விட்டு துரத்திய மனைவி ஆர்த்தி? ஜெயம் ரவி காவல் நிலையத்தில் கொடுத்த பரபரப்பு புகார்!
Actor Jayam Ravi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, கடந்த வாரம் தன்னுடைய மனைவியுடனான விவாகரத்து குறித்து அதிகார பூர்வமாக அறிக்கை வெளியிட்டு அறிவித்த சம்பவம், கோலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி ஆகியோரின் விவாகரத்து அதிர்ச்சியில் இருந்தே இன்னும் கோலிவுட் திரையுலக ரசிகர்கள் மீளாத நிலையில், ஆர்த்தி - ஜெயம் ரவி ஜோடியும் இந்த லிஸ்டில் இணைந்தனர்.

25
Jayam Ravi and Aarti Divorce

திருமணம் ஆனதில் இருந்து, தினம் தோறும் சண்டை போட்டுக்கொள்ளும் கணவன் - மனைவி கூட விவாகரத்து பெற்று பிரிய வேண்டும் என நினைப்பதில்லை. காரணம் அவர்களின் குழந்தைகள் தான். ஆனால் ஆர்த்தி - ஜெயம் ரவி ஜோடிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில்... ஏன் இப்படி ஒரு முடிவை ஜெயம் ரவி எடுக்க வேண்டும் என்பது? ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதே போல் கடந்த ஆண்டு, ஜெயம் ரவி திரையுலகில் அடியெடுத்து வைத்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை பிரபல யூ டியூப் சேனல் கொண்டாடிய போது, ஜெயம் ரவி மீதான காதலை ஆர்த்தி வெளிப்படுத்திய விதம் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. சிலர் இப்படி ஒரு கணவர் கிடைக்க ஆர்த்தி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என தங்களின் வாழ்த்துக்களை கூட தெரிவித்தனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும்போது.. 1 மணிநேரம் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா! ஸ்தம்பித்த ஸ்டூடியோ!
 

35
Jayam Ravi Completed 20th year in cinema

அதே போல் ஜெயம் ரவி... வீட்டில் எல்லோருக்கும் நான் செல்லம். பொண்டாட்டி எனக்கு செல்லம் என கூறியது, பெண் குழந்தை மீது தான் ஆசை ரொமான்டிக்காக பேசிய தருணங்கள், பார்க்கும் போதே ரசிக்க வைக்கும் அளவில் இருந்தன. 4 வருடங்களுக்கு மேல் காதலித்து, திருமணம் ஆகி 15 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும் கூட, சில மாதங்களில் ஏற்பட்ட மனக்கசப்பு இவர்களை விவாகரத்து வரை நகர்த்தி வந்தது தான் பேரதிர்ச்சி. ஆர்த்தி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்ட விஷங்கள் எல்லாம், பொய் என ஜெயம் ரவி கூறியது மட்டும் இன்றி... கெனிஷா மீது ஆர்த்தி தரப்பில் வீண் பழி போடுவதாகவும், தன்னுடைய பெயரை கலங்க படுத்த தான் அவருடன் காதல் என வதந்தியை கிளம்புவதாக பேசி இருந்தார் இதற்கான சில ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் பேசி இருந்தார்.
 

45
Jayam Ravi and Aarti

அதே நேரம், ஆர்த்தி மீது கோவத்தை வெளிப்படுத்திய ஜெயம் ரவி... பாடகி கெனிஷா கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தவர், அவர் ஒரு ஹீலர், அதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றி வருகிறார். அவருடன் சேர்ந்து ஹீலிங் சென்டர் துவங்க உள்ளேன் என கூறியது... உண்மையிலேயே ரவிக்கும் - கெனிஷாவுக்கும் இடையே ஏதாவது இருக்குமோ? என்கிற சந்தேகத்தை தூண்டியது. 

இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க, தற்போது ஜெயம் ரவி, அவருடைய வீட்டில் இருந்து விரட்டப்பட்டதாகவும்... இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. அதாவது ஜெயம் ரவி, தன்னுடைய மனைவி, மற்றும் மகன்களுடன் நீலாங்கரையில் உள்ள சொகுசு பங்களாவில் வாழ்ந்து வந்த நிலையில்... ஜெயம் ரவி, வீட்டில் இருந்து வெளியேறி சில மாதங்களாக கோவா சகவாசத்தில் இருந்ததால், மனைவி, மகன், அம்மா, அப்பா, அண்ணன் என யாருடனும் தொடர்பில் இல்லை என கூறப்படுகிறது. ஜெயம் ரவியை தொடர்பு கொண்டால் கூட... போன் ஸ்விட் ஆப் என்றே வந்துள்ளது. 

பிக்பாஸ் சீசன் 8 துவங்குவது எப்போது? தேதியை உறுதி செய்த விஜய் சேதுபதியின் புதிய புரோமோ!
 

55
Actor Jayam Ravi Police Complaint:

இந்நிலையில், ஜெயம் ரவி சென்னை திரும்பிய நிலையில், தன்னுடைய வீட்டிற்கு சென்றபோது உள்ளே விடாமல் ஆர்த்தி வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, இதுகுறித்து ஜெயம் ரவி சென்னை நீலாங்கரையில் உள்ள காவல் நிலையத்தில் மனைவி ஆர்த்தியின் பெயரில் புகார் அளித்ததாகவும், தன்னுடைய தன்னுடைய கார், மற்றும் உடமைகள் அனைத்தையும் ஆர்த்தி பறித்து கொண்டார். அவற்றை மீட்டு தருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசார் ஆர்த்தியிடம் பேசியபோது இது அவருடைய வீடு அவர் எப்போது வேண்டும்மானாலும் வரலாம் என கூற... ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதி மன்றம் வரை சென்றுள்ளதால், சட்ட ரீதியாக ஆர்த்தியை அணுகும் படி அட்வைஸ் கொடுத்துள்ளார்களாம். இந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories