வரதட்சணை கொடுத்து ரம்யா பாண்டியனை திருமணம் செய்துகொண்ட லவல் தவான் - காரணம் என்ன?

First Published | Dec 29, 2024, 12:40 PM IST

நடிகை ரம்யா பாண்டியனை திருமணம் செய்துகொண்ட லவல் தவான், வரதட்சணை கொடுத்து அவரை கரம்பிடித்த தகவலை ரம்யாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

Ramya Pandian Marriage

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் ரம்யா பாண்டியன். அவர் ஜோக்கர், ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், டம்மி டப்பாசு போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர், பெரியளவில் பட வாய்ப்பு கிடைக்காததால், யோகா பயிற்சி எடுக்க ரிஷிகேஷுக்கு சென்றிருந்தார். அப்போது தனக்கு யோகா பயிற்சி அளித்த லவல் தவான் என்பவரை காதலித்து வந்தார் ரம்யா பாண்டியன். இந்த காதலுக்கு குடும்பத்தினரும் ஓகே சொன்னதை அடுத்து கடந்த நவம்பர் மாதம் ரிஷிகேஷில் வைத்து லவல் தவானை கரம்பிடித்தார் ரம்யா பாண்டியன்.

Ramya pandian Husband

ரம்யா பாண்டியனின் காதல் திருமணம் பற்றி பலரும் அறிந்திடாத தகவலை அவரது தாயார் சாந்தி சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். அதன்படி ரிஷிகேஷில் லவல் தவானிடம் ரம்யா தான் முதன்முதலில் புரபோஸ் செய்திருக்கிறார். அவருக்கு பிடித்திருந்தாலும் தன்னுடைய குருஜி ரவி ஷங்கர் ஓகே சொன்னால் தான் திருமணம் செஞ்சுக்கலாம் என சொல்லிவிட்டாராம் லவல். பின்னர் ரம்யா பாண்டியன் ரவி ஷங்கரிடம் பேசி ஓகே வாங்கிய பின்னர் தான் அவர்கள் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இதையும் படியுங்கள்... ஹய்யோடா அவ பார்த்த பார்வை! ஹனிமூனில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ரம்யா பாண்டியன்!

Tap to resize

Ramya Pandian, Lovel Dhawan

ரிஷிகேஷில் தான் இருவரும் சந்தித்துக் கொண்டதால் அங்கேயே திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். லவல் தவான் ரம்யாவின் வீட்டுக்கு கார்த்திகை தீபம் டைம்ல வந்தப்போ திடீரென மண்டியிட்டு ரம்யாவின் அம்மாவிடம் நீங்க என்னோட மாமியார் வருவீங்களானு கேட்டிருக்கிறார். அப்போது என்ன பதில் சொல்லனு தெரியாமல் இருந்த ரம்யாவின் அம்மா, அவர் தன் பெண்ணை பாசத்தோடு பார்த்துக் கொள்வதை பார்த்து ஓகே சொல்லிவிட்டாராம்.

Ramya Pandian Marriage Dowry

லவல் தவான் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவங்க வழக்கப்படி பெண்கள் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை எதுவும் வாங்க மாட்டார்களாம். இதற்கு மாறாக பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் தான் வரதட்சணை கொடுப்பார்களாம். அதனால் ரம்யா பாண்டியனுக்கு பெரும் தொகையை வரதட்சணையாக கொடுத்தது மட்டுமின்றி நகைகளையும் வாங்கி கொடுத்தார்களாம். அதுமட்டுமின்றி திருமண செலவுகளையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாக கூறி இருக்கிறார்கள்.

Ramya Pandian wedding Reception

ஆனால் ரம்யா பாண்டியன் குடும்பத்தார் தாங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான செலவை ஏற்றுக்கொள்வதாக கூறி சென்னையில் பிரம்மாண்டமாக அதை நடத்தி இருக்கிறார்கள். அதேபோல் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு சென்ற பின்னர் முதன்முதலில் கேசரி செய்துகொடுத்தாராம் ரம்யா பாண்டியன். இதனால் இம்பிரஸ் ஆன லவல் தவான் அம்மா, ரம்யா பாண்டியனுக்கு ஒரு லட்சம் ரூபாயை கொடுத்தாராம். இந்த தகவலை ரம்யா பாண்டியனின் தாயார் சாந்தி பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்...  ஜோதா - அக்பர் கெட்டப்பில் கணவரோடு ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!

Latest Videos

click me!