விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சுமார் 2 ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்து வந்த திரைப்படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் குமாரும், ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நயன்தாராவும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இதில் பிரதீப் ரங்கநாதனின் தந்தை கதாபாத்திரத்தில் சீமான் நடித்திருக்கிறார். மேலும் மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா, கெளரி கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
24
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதி
லவ் இன்சூரன் கம்பெனி திரைப்படத்தை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் தற்போது அதன் ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி அப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டு இரண்டாவது ரிலீசுக்கு தயாராகி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதம் அவர் நடித்த டிராகன் படம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தின் வெற்றியால் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.
34
தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் ரிலீசா?
ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் டியூடு திரைப்படமும் தீபாவளி பண்டிகைக்கு தான் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ளார். அப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். அப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. அது ஏற்கனவே தீபாவளி ரிலீஸ் என அறிவித்துள்ளதால், லவ் இன்சூரன்ஸ் கம்பெனியும் தற்போது அதே நாளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பிரதீப்பின் இரண்டு படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போகிறதா என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அநேகமாக டியூடு படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்துடன் இந்த ஆண்டு தீபாவளிக்கு சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அவற்றி பைசன் படமும் ஒன்று. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். இதுதவிர நடிகர் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். இதனுடன் லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படமும் தீபாவளி விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இவற்றுடன் சூர்யாவின் கருப்பு படமும் தீபாவளிக்கு திரைக்கு வர வாய்ப்பு உள்ளது.