OTT Thriller Movies : ஓடிடியில் டஜன் கணக்கான ட்விஸ்டுகள் நிறைந்த டாப் 5 சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்

Published : Aug 26, 2026, 08:01 PM IST

Malayalam Thriller Movies : ஒரு சின்ன கதையை வெச்சுக்கிட்டு, பிரமாதமான படம் பண்றதுல மலையாள சினிமா இயக்குநர்கள் கில்லாடிகள். அவர்கள் கொடுத்த டாப் 5 த்ரில்லர் படங்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
16
OTT Must Watch Movies

சிம்பிளான கதைக்களத்தை வைத்துக்கொண்டு, அதை விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றுவதில் மலையாள சினிமாவுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக க்ரைம், மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் வகை திரைப்படங்களில் மலையாள இயக்குநர்கள் தொடர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். வழக்கமான கமர்ஷியல் படங்களைத் தாண்டி, ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்புடன் நகரும் திரைப்படங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு சில மலையாள த்ரில்லர் படங்கள் சிறந்த தேர்வாக இருக்கின்றன. அந்த வகையில், ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்கக்கூடிய 5 மலையாள த்ரில்லர் படங்கள் பற்றி பார்க்கலாம்.

நாட்டையே நடுநடுங்க வைத்த நிஜ சீரியல் கில்லரின் கதை... OTT-யில் டிரெண்டாகும் சைக்கோ த்ரில்லர் படம்

26
அஞ்சாம் பத்திரா (Anjaam Pathiraa)

க்ரைம் மற்றும் மர்மத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘அஞ்சாம் பத்திரா’, தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களின் ஆர்வத்தை தக்க வைக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர். விசாரணை, கொலை மர்மம் என கதை அடுத்தடுத்த திருப்பங்களுடன் நகர்வதால், க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும். இந்த திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். மலையாளம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் இப்படம் கிடைக்கிறது.

36
கொரோனா பேப்பர்ஸ் (Corona Papers)

பெயரே வித்தியாசமாக இருக்கும் ‘கொரோனா பேப்பர்ஸ்’, கதையின் வேகத்தால் கவனம் ஈர்க்கும் த்ரில்லர் திரைப்படமாகும். படம் தொடங்கிய பிறகு அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கதையில் வரும் சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்லும் விதம், படத்தை இறுதிவரை பார்க்கத் தூண்டும். வார இறுதியில் ஒரு பரபரப்பான திரைப்படத்தை பார்க்க விரும்புபவர்கள் இந்தப் படத்தை தேர்வு செய்யலாம். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படம் கிடைக்கிறது.

46
கோலம் (Golam)

ஒரு அலுவலகத்தை பின்னணியாகக் கொண்டு நடைபெறும் கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘கோலம்’. கொலையின் பின்னணி என்ன, அதை செய்தது யார், சம்பவம் எப்படி அரங்கேறியது என அடுத்தடுத்து எழும் கேள்விகளே படத்தின் முக்கிய சுவாரஸ்யமாக அமைகின்றன. வழக்கமான க்ரைம் கதைகளிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையுடன் செல்லும் இப்படம், இறுதிவரை மர்மத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதையும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.

56
ஆபரேஷன் ஜாவா (Operation Java)

டெக்னாலஜி மற்றும் சைபர் க்ரைம் பின்னணியில் பரபரப்பாக நகரும் திரைப்படம் ‘ஆபரேஷன் ஜாவா’. ஒவ்வொரு சம்பவத்துக்கும் பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை படம் தொடர்ந்து ஏற்படுத்தும். திரைக்கதையில் அடுத்தடுத்து வரும் திருப்பங்களால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தொடர்ந்து டென்ஷன் இருக்கும். த்ரில்லர் விரும்புபவர்களுக்கு இது ஒரு சுவாரஸ்யமான தேர்வாக அமையும். ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படத்தை பார்க்கலாம்.

66
புலிமடா (Pulimada)

2023-ம் ஆண்டு வெளியான ‘புலிமடா’ திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு சிவில் போலீஸ் அதிகாரியைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. வழக்கமான த்ரில்லர் படங்களைப் போல வேகமாக மட்டுமே செல்லாமல், கதாபாத்திரங்களின் மனநிலை மற்றும் சம்பவங்களின் பின்னணியையும் படத்தின் முக்கிய அம்சமாக கொண்டு செல்கிறது. வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை விரும்புபவர்கள் இந்தப் படத்தையும் தங்கள் லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம். நெட்பிளிக்ஸில் தளத்தில் ‘புலிமடா’ கிடைக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories