Lokesh Kanagaraj
மாநகரம் திரைப்படத்திற்கு பிறகு கடந்த 2019ம் ஆண்டு பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான "கைதி" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இயக்குனராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்றால் அது மிகையல்ல. எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல், உலக நாயகன் கமல்ஹாசனின் திரைப்படங்களை பார்த்து மட்டுமே சினிமாவை கற்றுக்கொண்டு. இப்போது தமிழ் திரையுலகையே ஆண்டு வரும் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறி இருக்கிறார் என்றால் அது நிச்சயம் மிகை அல்ல. அதிலும் குறிப்பாக அவருடைய சினிமாட்டிக் யூனிவர்ஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
கண்ணே பட்டுடும்... பார்க்க அப்படியே லட்டு போல் இருக்கும் அமலா பால் மகன்! வைரலாகும் போட்டோஸ்!
vikram movie
கைதி திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் உடன் மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும், உலகநாயகன் கமல்ஹாசனோடு விக்ரம் என்கின்ற திரைப்படத்திலும் பணியாற்றிய லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், சென்னையில் ஒரு சிகிச்சைக்காக வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வாரத்தில் மீண்டும் தனது கூலி திரைப்பட பணிகளில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாகர்ஜுனா, சத்யராஜ் மற்றும் சௌபின் உள்ளிட்ட நடிகர்களுடைய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Coolie Movie
இந்த சூழலில் அண்மையில் ஒரு பேட்டியில் பங்கேற்று பேசிய லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படம் தன்னுடைய சினிமாடிக் யூனிவெர்ஸ்க்குள் வராது என்றும், அதே நேரம் அடுத்தபடியாக உருவாகும் கைதி 2 திரைப்படம் அனைத்து எல்சியூ கதாபாத்திரங்களையும் இணைத்த ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் என்றும் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். இருப்பினும் தளபதி விஜய் "லியோ தாஸ்" என்கின்ற கதாபாத்திரத்தில் இந்த எல்.சி.யூக்குள் வருவாரா என்பது சந்தேகம் தான். ஆனால் ரோலக்ஸ், டெல்லி மற்றும் கமாண்டர் அருண்குமார் விக்ரம் ஆகியோர் கைதி 2 திரைப்படத்தில் கட்டாயம் இடம் பெறுவார்கள் என்றும் லோகேஷ் கனகராஜ் உறுதியளித்திருக்கிறார். இந்நிலையில் கூலி திரைப்பட சூட்டிங் முதல் கட்ட பணிகள் முடிந்துள்ள இந்த இடைவெளியில், அவர் தெலுங்கு திரையுலகிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
Ram Charan
ஏற்கனவே மாஸ்டர், லியோ மற்றும் விக்ரம் திரைப்படங்களில் வெற்றிகளை பார்த்து யோகேஷ் கனகராஜை நேரில் தனது வீட்டிற்கு அழைத்து, விருந்து ஒன்றை கொடுத்திருந்தார் பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் சிரஞ்சீவி என்றும். மேலும் தன்னுடைய மகன் ராம்சரனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூலி திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருந்த லோகேஷ் கனகராஜ், தனக்கு கிடைத்த ஒரு சிறு இடைவெளியில் மீண்டும் சிரஞ்சீவியை சென்று சந்தித்து வந்ததாகவும். ராம்சரண் தற்பொழுது நடித்துவரும் சங்கரின் கேம் சேஞ்சர் திரைப்பட பணிகள் முடிந்த பிறகு ராம்சரனோடு ஒரு திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இணை உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
"நான் வேட்டையன் படம் பற்றி தப்பா பேசல; அது ஒரு ஹிந்தி படம்" - கங்குவா தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!