கண்ணே பட்டுடும்... பார்க்க அப்படியே லட்டு போல் இருக்கும் அமலா பால் மகன்! வைரலாகும் போட்டோஸ்!

First Published | Oct 15, 2024, 9:39 PM IST

நடிகை அமலா பால் தன்னுடைய மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Amala Paul Photos

நடிகை அமலா பால் மலையாள திரையுலகை சேர்ந்தவராக இருந்தாலும், இவரை பிரபலமடைய வைத்தது தமிழ் படங்கள் தான். 2009-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'நீலத்தாமரா' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதை தொடர்ந்து தமிழில் 'வீர சேகரன்' என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 2010-ம் ஆண்டு நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த சிந்து சமவெளி படத்தின் மூலம் சர்ச்சை நாயகியாக அறியப்பட்டார்.

Amala Paul Photos

இந்த படத்தில், இவரின் கதாபாத்திரம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானதோடு... இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என பலர் போர்க்கொடி தூக்கினர். இந்த படத்தின் சர்ச்சை அமலா பாலுக்கு நெகட்டிவ் விமர்சனத்தை தேடி தந்தது. இந்த படத்தின் தாக்கத்தில் இருந்து அமலாபாலை வெளியே கொண்டு வந்த திரைப்படம் 'மைனா'. பிரபு சாலமன் இயக்கத்தில் இவர் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாகவும்... வசூல் ரீதியாகவும் அமலாபாலுக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை! வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டை விட்டு குடும்பத்தோடு வெளியேறிய நடிகர்!

Tap to resize

Amala Paul Photos

தளபதி விஜய்க்கு ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்த நடிகை அமலா பால், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், 2017-ல் விவாகரத்து பெற்று பிரிந்தார். அமலா பால் - விஜய் விவாகரத்துக்கு காரணம், மீண்டும் அமலா பால் திரையுலகில் கவனம் செலுத்தியது என கூறப்பட்டது.

Amala Paul Photos

விவாகரத்துக்கு முன்னர், அமலா பால் நடித்த அம்மா கணக்கு, பசங்க 2, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும்... விவாகரத்துக்கு பின்னர் நடித்த படங்கள் படு மோசமான தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஆடை படத்தில் எல்லை மீறும் விதத்தில் அமலா பால் நடித்தது, அமலா பாலின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

அரபிக் இதிகாசத்தில் உள்ள காதலின் 7 நிலையை ஒரே பாட்டில் கூறிய வைரமுத்து!

Amala Paul Photos

கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அமலா பால்... திருமணத்தின் போதே 3 மாதம் கர்ப்பமாக இருந்தார். இதை தொடர்ந்து சமீபத்தில் அமலா பாலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது தன்னுடைய குழந்தையுடன் அமலா பால் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

புதிய தாயான அமலா பால், உடல் எடை கூடி காணப்படுகிறார். அதே போல் அமலா பாலின் மகனும் சும்மா லட்டு போல் இருப்பதாகவும், அவருக்கு சுற்றி போடும் படி ரசிகர்கள் அன்பு கட்டளை போட்டு வருகிறார்கள்.

Latest Videos

click me!