அதன்படி பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜை தான் முதலில் ரோலெக்ஸ் கதாபாத்திற்கு இயக்குனர்லோகேஷ் கனகராஜ் மனதில் வைத்திருந்தாராம். இதுகுறித்து நேற்று நடைபெற்ற கடவா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிருத்விராஜிடம் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், என் பெயரை ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு சொல்லி இருப்பதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என கூறினார்.