தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்த லோகேஷ் கனகராஜ், தற்போது ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 'DC' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
24
லோகேஷ் கனகராஜின் டிசி
அதில் லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், வாமிகா கபி 'சந்திரா'வாக நடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு நிமிடம், 8 வினாடிகள் நீளமுள்ள இந்த டீசரில், லோகேஷ் கனகராஜ் முகம் முழுக்க ரத்தம், நீண்ட முடி மற்றும் அடர்த்தியான தாடியுடன் ஒரு குறுகிய நடைபாதையில் நடந்து வருகிறார். மறுபுறம், வாமிகாவும் இதுவரை கண்டிராத அவதாரத்தில், கனகராஜை நோக்கி நம்பிக்கையுடன் நடந்து வரும்படியான காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
34
ரோலெக்ஸ் லுக்கில் லோகேஷ்
இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் வாமிகா கபியைத் தவிர, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் இது என்பதால், அவரின் நடிப்பைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும், அவரது தோற்றத்தை பார்க்கும் போது லேசாக ரோலெக்ஸ் சாயல் தெரிகிறது. இப்படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
டீசரின் படி பார்த்தால், ஒரு பொறுக்கியும், விலைமாதுவும் அவங்கவங்க வேலையை முடிச்சிட்டு வரும்போது, இருவருக்கும் இடையில் எதிர்பாராத சந்திப்பு ஏற்படுகிறது. இது ஒரு ரக்கட் காதலின் தொடக்கமாக இருக்கலாம். சந்திராவின் பழைய வாடிக்கையாளருக்கும், அவரின் காதலனுக்கும் இடையில் நடக்கும் சண்டைக் காட்சிகள் கொண்ட படமாக இது இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கொடூரமாக கொலை செய்யும் தேவதாஸுக்கும், ஒரு விலைமாதுவுக்கும் இடையே நடக்கும் காதல் தான் டிசி படத்தின் கதைச் சுருக்கம்.