அப்படியே அப்பாவை ஜெராக்ஸ் எடுத்தமாதிரி இருக்கான்... ஜூனியர் மாதம்பட்டியின் போட்டோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா

Published : Nov 01, 2025, 03:42 PM IST

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அக்குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு, அவன் பார்ப்பதற்கு அவனுடைய அப்பா போலவே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

PREV
14
Joy Crizildaa Blessed With a Baby Boy

தமிழ் சினிமாவில் பிசியான ஆடை வடிவமைப்பாளராக வலம் வந்தவர் ஜாய் கிரிசில்டா. விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கும் இவர், முதலில் இயக்குனர் ஜே ஜே ப்ரெட்ரிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் ஜாய் கிரிசில்டா. இதையடுத்து சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜிடம் ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்த்து வந்தார் ஜாய்.

24
மாதம்பட்டி ரங்கராஜ் உடன் திருமணம்

மாதம்பட்டி ரங்கராஜ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் நடுவராக களமிறங்கியபோது விதவிதமான ஆடைகளில் வருவார். அந்த ஆடைகளை எல்லாம் வடிவமைத்தது ஜாய் கிரிசில்டா தான். மாதம்பட்டி ரங்கராஜ் உடன் நெருங்கி பழகிய சில மாதங்களிலேயே இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்கிற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கும் நிலையில், 2023-ம் ஆண்டு அவர் ஜாய் கிரிசில்டாவை சென்னை திருவான்மியூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். அதை வெளியே சொல்லாமல் இருவரும் சீக்ரெட்டாகவே வாழ்ந்து வந்தனர்.

34
கர்ப்பமான ஜாய் கிரிசில்டா

திருமணமான இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை கர்ப்பமாகி இருக்கிறார் ஜாய். அதில் மூன்று முறை அபாஷன் செய்த நிலையில், நான்கவதாக இந்த ஆண்டு கர்ப்பமாகி இருக்கிறார். இந்த முறை அபாஷன் செய்ய முடியாத நிலை வந்ததை அடுத்து ஜாய் கிரிசில்டாவை பிரிந்து சென்றிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இதையடுத்து தங்களுக்கு திருமணமாகி தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பொதுவெளியில் போட்டுடைத்தார் ஜாய் கிரிசில்டா. பின்னர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி குற்றம்சாட்டி வந்தனர். இதுமட்டுமின்றி தனக்கு மாதம் 6.5 லட்சம் தர வேண்டும் என்று ஜாய் கிரிசில்டா குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

44
ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை

இந்த நிலையில் நேற்று ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், அந்த குழந்தையின் பிஞ்சு விரல்களை பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, தன்னுடைய மகன் அச்சு அசல் அவனின் அப்பாவை போல் இருக்கிறான் என பதிவிட்டு, ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தன்னுடைய மகனுக்கு ரகா ரங்கராஜ் என பெயரிட்டு இருப்பதாகவும் இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டு இருக்கிறார் ஜாய் கிரிசில்டா. அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories