கடந்த நான்கு வருடங்களாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கான பட்டியலில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள், மதிப்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், 500 முன்னணி நிறுவனத்தின் சிஇஓக்கள், மிகப்பெரிய தொழிலதிபர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் பல துறையை சேர்ந்தவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களில் நூறு பேர் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கப்படுகிறது.
அம்மாடியோவ்...ஒரு ஆஸ்கர் விருதுக்கு இத்தனை கோடி செலவு செய்தாரா ராஜமௌலி? ஷாக்கிங் தகவல்.!
இந்த வருடம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பள்ளி, பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி லிசா கில், ராஜ்யசபா உறுப்பினரான டாக்டர் சசிகலா புஷ்பா ராமசாமி, பத்மஸ்ரீ விருதுகளை பெற்ற டாக்டர் சோமா கோஸ், பத்மா ஸ்ரீ வாட்த்சவா, ஐஏஎஸ் அதிகாரியான சௌமியா சர்மா, மாநில ஆதிவாசிகள் நலத்துறை அமைச்சரான திருமதி ரேணுகா சிங் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த சாதனை பெண்மணிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் இந்த முறை தமிழகத்திலிருந்து முதன்முறையாக நடிகை லிசி ஆண்டனி இந்த தனித்துவமான பெண் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸ்கர் விருது RRR பட பாடலுக்கு வழங்கப்பட்ட பரபரப்புக்கு நடுவே, இவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
'மனிதம் காத்து மகிழ்வோம்' ரஜினி ரசிகர்கள் மாநாடு திடீர் ரத்து..! வெளியான பரபரப்பு அறிக்கை..!
தமிழ் திரையுலகில் கடந்த 2011ல் தூங்கா நகரம் என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான லிசி ஆண்டனி, அதன் பிறகு தங்க மீன்கள், பேரன்பு, நாடோடிகள் 2, நெற்றிக்கண், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உள்ளிட்ட பல படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளியான கட்டா குஸ்தி, ராங்கி, சமீபத்தில் வெளியான பொம்மை நாயகி ஆகிய படங்களில் துணிச்சலும் தைரியமும் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பால் ரசிகர்களின் மனதிலும் ஆழ பதிந்துள்ளார்.
இந்திய தேசிய வழக்குரைஞர் சங்கம் (INBA) தனித்தன்மை வாய்ந்த பெண்களின் ஆதரவுடன், ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதுடன் நாட்டிலுள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட உதவி மற்றும் வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறது.. தனித்துவமான பெண்களுக்கான கடந்த 3-வது பதிப்பு வெளியானபோது குடியரசுத்தலைவரிடமிருந்து கிடைத்த பாராட்டு செய்தி இந்திய தேசிய வழக்குரைஞர் சங்கத்தை (INBA) பெருமைப்படுத்துவதாகவும் மேலும் உற்சாகமூட்டுவதாகவும் அதற்கான ஒரு அங்கீகராமகவும் அமைந்தது.
டைகர் அட்டாக்கில் கணவரை இழந்த பெள்ளி.. பொம்மனிடம் உள்ள அபார திறமை! எலிபென்ட் விஸ்பரர்ஸ் குறித்து DFO வெங்கடேஷ்