பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த தேவதையை கண்டேன் திரைப்படத்திற்காக தேவா இசையமைத்த சூப்பர் ஹிட் பாடலான ‘ஒரே ஒரு தோப்புல’ என்கிற கானா பாடலை பாடியதும் சபேஷ் தான். ஸ்ரீலேகா பார்த்தசாரதி உடன் இணைந்து அப்பாடலை பாடி இருந்தார் சபேஷ்.
முரளி, சூர்யா நடிப்பில் வெளியான, காதலே நிம்மதி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கந்தன் இருக்கும் இடம்’ என்கிற பாடலை சபேஷ் தான் பாடி இருந்தார். அப்பாடலுக்கு அவரின் அண்ணன் தேவா இசையமைத்து இருந்தார்.
பிரபுதேவா நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு ரிலீஸ் ஆன நினைவிருக்கும் வரை என்கிற திரைப்படத்திற்காக தேவா இசையமைத்திருந்த ‘காத்தடிக்குது காத்தடிக்குது’ என்கிற பாடலை கேட்டாலே டான்ஸ் ஆடத் தோன்றும். அந்த மாஸ்டர் பீஸ் கானா பாடலை பாடியதும் சபேஷ் தான்.