அண்ணாமலை, அருணாச்சலம், பாட்ஷா படத்துக்கு பின்னணி இசை செய்த சபேஷ்.. யாருக்கும் தெரியாத சீக்ரெட்ஸ்.!

Published : Oct 23, 2025, 02:26 PM IST

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், சபேஷ்-முரளி இரட்டையர்களில் ஒருவருமான இசையமைப்பாளர் சபேஷ் காலமானார். 'தவமாய் தவமிருந்து', 'பொக்கிஷம்' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

PREV
14
சபேஷ் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேவா தனது இசை பயணத்தில் நுழைந்தபோது, ​​தனித்துவமான மெல்லிசை மற்றும் பாரம்பரியம் இசை கலவை மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். 1980-களில் தமிழ் சினிமாவில் கலக்க தொடங்கினார் தேவா. தேவா குடும்பம், ஒரு இசை குடும்பம் ஆகும். அவரின் சகோதரர்கள் சபேஷ்–முரளி பிரபல இரட்டை இசையமைப்பாளர்களாக தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்தனர். அவர்களின் இசை தனித்துவம் மற்றும் புதுமை ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது. இன்று இசையமைப்பாளர் சபேஷ் காலமானார். அவரது சினிமா வாழ்க்கையை பற்றி பார்க்கலாம்.

24
இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சபேஷ்

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவாவுக்கு உதவி இயக்குனர்களாக பணியாற்றியதன் மூலம் இவர்கள் இசை உலகில் தங்கள் பயணத்தைத் தொடங்கினர் சபேஷ் முரளி. தேவாவின் வழிகாட்டுதலில் பெற்ற அனுபவம், இவர்களின் இசை வாழ்க்கைக்கான வலுவான அடித்தளமாக அமைந்தது. இருவரும் இணைந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளனர். ‘தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், மிளகா, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, கோரிப்பாளையம், மாயாண்டி குடும்பத்தார் போன்ற திரைப்படங்களில் இவர்களின் இசை தனித்துவமான பாணியையும் உணர்ச்சிகரமான பாட்டுகளை போட்டு மக்கள் மனதில் நீங்கா முத்திரை இடம்பிடித்தனர்.

34
சபேஷ்

சபேஷ் தனியார் நிறுவனத்துக்கு முன்பு அளித்துள்ள பேட்டியில் தன் இசை பயண அனுபவங்களை பகிர்ந்திருந்தார். அதில், “நான் எல்லா இசையமைப்பாளர்களிடமும் வாசித்திருக்கிறேன். ஆனால் எம்.எஸ். விஸ்வநாதன் ஐயாவுடன் மட்டும் பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை” என்று சபேஷ் கூறுகிறார். கே.வி. மகாதேவன் உள்ளிட்ட பல மூத்த இசையமைப்பாளர்களுடன் அவர் பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளார்.

44
ரஜினி படத்துக்கு பின்னணி இசையமைத்த சபேஷ்

1983 ஆம் ஆண்டு கீபோர்ட் பிளேயராக சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கிய சபேஷ், அந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தேவா திரையுலகில் அடியெடுத்து வைத்தார். “அந்த காலத்தில் நான் அனைவரிடமும் கீபோர்ட் வாசித்திருந்தேன்,” என அவர் நினைவு கூர்ந்தார். “பாட்ஷா படத்துக்கான பின்னணி இசைக்கான யோசனையை அண்ணன் கொடுத்தார், அதை நான் பின்பற்றினேன். ‘அண்ணாமலை’, ‘அருணாச்சலம்’, ‘பாட்ஷா’ - இந்த மூன்று படங்களுக்கும் நான் தான் பின்னணி இசை செய்தேன்,” என கூறியுள்ளார் சபேஷ்.

Read more Photos on
click me!

Recommended Stories