டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.75 கோடி வசூலித்ததை பாராட்டி பேசி வருகிறோம். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2022 இல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான ஒரு சிறு பட்ஜெட் திரைப்படம், யாரும் எதிர்பார்க்காத விதமாக உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வெறும் ரூ.16 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் பான்-இந்தியா திரைப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து திரையுலகில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான மோதலை மையமாகக் கொண்ட கதையம்சம் கொண்டது இந்தப் படம்.
25
காந்தாரா ஹிட்டானது எப்படி?
அது வேறெதுவுமில்லை கன்னடத்தில் கடந்த 2022ம் ஆண்டு ரிலீஸ் ஆன காந்தாரா தான். இப்படம் கன்னடத்தில் மட்டுமல்ல, ரிலீஸ் ஆன அனைத்து மொழிகளிலும் அற்புதம் செய்தது. கர்நாடகாவின் பழங்குடி மரபுகளை கண்முன் நிறுத்திய இந்தப் படம் அனைவரையும் கவர்ந்தது. சிறிய படமாக ரசிகர்கள் முன் வந்த காந்தாராவுக்கு சோசியல் மீடியா மூலம் மிகப்பெரிய ரீச் கிடைத்தது.
35
ஆன்மீக பாரம்பரியத்தை அறிமுகப்படுத்திய காந்தாரா
'காந்தாரா' படத்தின் கதை, இயக்கம் மட்டுமின்றி ஹீரோவாகவும் ரிஷப் ஷெட்டி நடித்துள்ளார். அவரது அற்புதமான நடிப்புக்கு விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்தன. இந்தப் படத்தில் சப்தமி கவுடா, கிஷோர், மானசி சுதீர், அச்யுத் குமார், ஸ்வராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக பூத கோலா என்ற ஆன்மீக பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தப் படம் தனி அங்கீகாரம் பெற்றது.
45
ஓடிடியிலும் கொண்டாடப்பட்ட காந்தாரா
கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட காந்தாரா, ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி நாடு முழுவதும் 310 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலகளவில் 408 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து அதிரிபுதிரியான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'வராஹ ரூபம்' பாடல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள பாரம்பரிய இசையை காப்பி அடித்ததாக சர்ச்சை எழுந்தது. பின்னர், நீதிமன்றம் மூலம் சர்ச்சை தீர்க்கப்பட்டது. இப்போதும் கூட இந்தப் படத்தின் மீதான ஆர்வம் குறையவில்லை. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
55
பிரம்மாண்டமாக உருவாகும் காந்தாரா 2
இந்த வெற்றியைத் தொடர்ந்து 'காந்தாரா' இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதிக பட்ஜெட்டில், பான்-இந்தியா ரேஞ்சில் காந்தாரா அத்தியாயம் 1ஐ அற்புதமாக உருவாக்கி வருகிறார் ரிஷப். இதற்காக, சண்டைக் கலைகளையும் கற்றுக்கொண்டார். இந்தப் படம் இந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகவுள்ளது.