Ajith Instagram Post : கனத்த இதயத்துடன் பணிக்கு திருப்புகிறேன் – புகைப்படங்களுடன் ‘தல’ அஜித் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

Published : Jun 05, 2026, 11:59 AM IST

Ajith Instagram Post : தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், பைக் ரேசிங் ஆர்வலருமான அஜித் குமார், தனது தாயார் மோகினி மணி அவர்களின் மறைவிற்குப் பிறகு, மிகுந்த மனவேதனையுடன் மீண்டும் தனது பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

PREV
13
தாயாரின் இழப்பு

அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (89), உடல்நலக் குறைவு காரணமாக மே 30-ம் தேதி அதிகாலையில் உறக்கத்திலேயே காலமானார். பிரிவினை காலத்தின்போது இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த சிந்தி குடும்பத்தைச் சேர்ந்த அவர், தனது பிள்ளைகள் வாழ்வில் சிறந்து விளங்குவதைப் பார்த்து பெருமிதம் கொண்டிருந்தார். அவரது மறைவு குறித்து குடும்பத்தினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "அவரது அன்பான இயல்பு, தன்னலமற்ற குணம் மற்றும் அமைதியான பண்பு ஆகியவற்றிற்காக அனைவராலும் மதிக்கப்பட்டவர்" என்று புகழஞ்சலி செலுத்தியிருந்தனர்.

23
மீண்டும் களத்தில் அஜித்

தாயின் மறைவு தந்த பெரும் சோகத்திற்கு மத்தியிலும், "வாழ்க்கை தொடர வேண்டும்" என்ற உறுதியுடன் அஜித் குமார் மீண்டும் தனது ரேஸிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அஜித்குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் ரேசிங் உடையில் களமிறங்குவதற்கு தயாராக இருக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அந்தப் பதிவில், "கனத்த இதயத்துடன் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளேன், ஆனால் வாழ்க்கை தொடர வேண்டும்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

33
குவியும் ஆதரவு

அஜித்தின் இந்த முடிவைப் பாராட்டியும், அவருக்கு ஆறுதல் கூறியும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். "உங்கள் தாயார் உங்களை மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்", "அவர் உங்களுக்கு எப்போதும் ஆசி வழங்குவார்", "சோகத்திலும் முன்னேறிச் செல்லும் உறுதியான மனிதராக உங்களை அவர் வளர்த்துள்ளார்" என உணர்ச்சிகரமான கமெண்ட்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சினிமாப் பயணத்தைப் பொறுத்தவரை, அஜித் குமார் கடைசியாக 2025-ம் ஆண்டு 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் தனது ரேசிங் ஆர்வத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தாயின் இழப்பைத் தாங்கிக்கொண்டு தனது கடமைகளைத் தொடரும் அஜித்தின் இந்த மனவலிமை அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories