Janany Kunaseelan Accident in Nizhal Movie Shooting : நிழல் படத்தின் படப்பிடிப்பின் போது ஜனனி குணசீலனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார்.
விஜய் பட நடிகைக்கு விபத்து; ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் காலில் காயம்!
Janany Kunaseelan Accident in Nizhal Movie Shooting : தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்தவர் நடிகை ஜனனி குணசீலன். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். இதே போன்று குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். தனக்கான சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் ஜனனிக்கு அவ்வவ் போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படிதான் லியோ படத்தில் நடித்தார்.
23
விஜய் பட நடிகைக்கு விபத்து; ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் காலில் காயம்!
தற்போது நிழல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஒன்றில் சிக்கியிருக்கிறார். அதில், அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காலில் கட்டு போட்ட நிலையில் நடந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
33
விஜய் பட நடிகைக்கு விபத்து; ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் காலில் காயம்!
இலங்கையைச் சேர்ந்தவர். மாடல், விஜே மற்றும் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார். மாடலாகவே கேமரா முன்பு தோன்றிய ஜனனி பல விளம்பரங்களில் நடித்திருக்கிறார். உதாரணத்திற்கு நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருக்கிறார். நியூஸ் ரீடர் மற்றும் தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.