விசில், உல்லாசம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான ஜேடி மற்றும் ஜெர்ரி, தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கியுள்ள படம் தான் தி லெஜண்ட். பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் லெஜண்ட் சரவணன் சயிண்டிஸ்டாக நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரைலர் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்தது.
அண்மையில் நடந்த லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா, கோலிவுட்டையே அசர வைத்தது. ஏனெனில் இது சரவணனின் அறிமுக படமாக இருந்தாலும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹன்சிகா, தமன்னா, பூஜா ஹெக்டே, டிம்பிள் ஹயாத்தி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவ்துலா என பாலிவுட் முதல் டோலிவுட் வரை பல்வேறு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகள் கலந்துகொண்டனர்.