கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆகும் நிலையில், ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
அதுமட்டுமின்றி இப்படம் தமிழகத்தில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலித்த படமாகவும் உருவெடுத்துள்ளது. இப்படம் 7 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் அஜித்தின் விஸ்வாசம் படம் இத்தகைய மைல்கல்லை எட்டி இருந்த நிலையில், விக்ரம் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
விக்ரம் படத்தின் வெற்றியால் படு குஷியில் இருக்கும் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக வழங்கினார். இதையடுத்து ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு ரூ.46 லட்சம் மதிப்புள்ள ரோலெக்ஸ் வாட்சை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.