விக்னேஷ் சிவன் - நயன் தாரா ஜோடியின் காதல் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, சரத்குமார், கார்த்தி, விக்ரம் பிரபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டவர்.
இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணம் நடத்தியும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது உறவினர்களை இந்த திருமணத்துக்கு அழைக்கவில்லை என்கிற தகவல் நேற்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது திருச்சியை அடுத்த லால்குடியில் வசிக்கும் விக்னேஷ் சிவனின் பெரியப்பா இதுகுறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் கூறி உள்ளதாவது: எனது தம்பி மகன் தான் விக்னேஷ் சிவன். எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் விக்னேஷ் சிவனையும் அவரது தங்கை ஐஸ்வர்யாவையும் எனது சொந்த பிள்ளைகள் போல் வளர்த்து வந்தேன். சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில் என வீட்டில் தான் இருப்பார் விக்னேஷ் சிவன்.