KamalHaasan : மருதநாயகம், சபாஷ் நாயுடு படங்களின் நிலைமை என்ன... மீண்டும் உயிர்பெறுமா? - மனம்திறந்த கமல்

Published : Jun 10, 2022, 11:32 AM ISTUpdated : Jun 10, 2022, 11:34 AM IST

KamalHaasan : நேற்று விக்ரம் படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசனிடம்  மருதநாயகம், சபாஷ் நாயுடு படங்கள் மீண்டும் உயிர்பெறுமா என கேள்வி எழுப்பப்பட்டது. 

PREV
14
KamalHaasan : மருதநாயகம், சபாஷ் நாயுடு படங்களின் நிலைமை என்ன... மீண்டும் உயிர்பெறுமா? - மனம்திறந்த கமல்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பின் வெளியான படம் விக்ரம். கமல் நடித்ததோடு தயாரிக்கவும் செய்திருந்த இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படம் எதிர்பார்த்தபடியே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. இதனால் கமல்ஹாசனும் படக்குழுவும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

24

இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி தந்த தைரியத்தால் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார் கமல். அதன்படி இவர் அடுத்ததாக பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இப்படத்தையும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

34

இதுதவிர நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு பின்னர் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கிடப்பில் போடப்பட்ட சபாஷ் நாயுடு, மருதநாயகம் ஆகிய படங்கள் மீண்டும் தூசிதட்டப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து நடிகர் கமலே விளக்கம் அளித்துள்ளார்.

44

நேற்று விக்ரம் படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசனிடம்  மருதநாயகம், சபாஷ் நாயுடு படங்கள் மீண்டும் உயிர்பெறுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல் “அந்த படங்களோடு நான் நீண்ட நாள் வாழ்ந்துவிட்டதால், இப்போ எனக்கு அந்த படங்களின் மீது ஆர்வமின்மை ஏற்பட்டுவிட்டது” என்று கூறினார். இதன்மூலம் அந்த படங்கள் மீண்டும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்பதை சூசகமாக அறிவித்துள்ளார் கமல். 

இதையும் படியுங்கள்... Rolex சூர்யாவை போல் விஜய் படத்தில் கெத்தான வில்லன் வேடம் ஏற்கும் தனுஷ்... அதுவும் இவர் டைரக்‌ஷன்லயா?

click me!

Recommended Stories